தமிழ்நாடு

”தமிழ்நாட்டின் IT புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்”... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

மதுரை, வடபழஞ்சியில் பின்னக்கிள் இன்பொடெக் சொலுயுசன்ஸின் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

”தமிழ்நாட்டின் IT புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்”... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பின்னக்கிள் இன்பொடெக் சொலுயுசன்ஸ், உலகெங்கும் உள்ள கட்டடக்கலை, பொறியியல் மற்றும் கட்டுமான (AEC) நிறுவனங்களுக்கான கட்டடத் தகவல் உருவப்படுத்தும் (BIM) சேவைகளில் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது.

தமிழ்நாடு மின்னனு நிறுவனம், இதற்கு முன்பு மதுரை வடபழஞ்சியில் உள்ள எல்கோசெஸ்ஸில் உள்ள பின்னக்கிள் இன்பொடெக் சொலுயுசன்ஸ் நிறுவனத்திற்கு 34.09 ஏக்கர் நில ஒதுக்கீடு செய்துள்ளது. பின்னக்கிள் இன்பொடெக் சொலுயுசன்ஸ், நிறுவனம் முதற்கட்டமாக 1,80,000 சதுர அடி பரப்பளவில் ரூ.120 கோடி முதலீட்டில் கட்டுமான பணிகளை முடித்து 950 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்துள்ளது.

இந்த அதிநவீன தகவல் தொழில்நுட்ப கட்டடம், மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திறமையான இளைஞர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்குள் சுமார் 6,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திறப்பு விழா, மதுரை நகரில் தொழில்நுட்ப வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய தருணமாகும்.

”தமிழ்நாட்டின் IT புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்”... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் காணொலிக் காட்சியின் வழியாக மதுரை, வடபழஞ்சியில் பின்னக்கிள் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:

அனைவருக்கும் வணக்கம். பின்னக்கிள் நிறுவனத்தின் மிகப்பெரிய Global Engineering Centre of Excellence-யை மதுரை, வடபழஞ்சியில் திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன். மதுரை சிறப்பு பொருளாதார மண்டலம், வடபழஞ்சியில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 245.17 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துள்ளது.

இதில் 120 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,80,000 சதுர அடி பரப்பளவில் 950 பணியாளர்களுக்கு பணிவாய்ப்பினை அளித்து, உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப மையத்தை பின்னக்கிள் நிறுவனம் அமைத்துள்ளது. இது இந்தியாவில் அமையும் நான்காவது Global Delivery Centre ஆகும்.

உலகிலேயே மிகப்பெரிய BIM எனப்படும் (Building Information Modelling) பொறியியல் மையம் ஆகும். 3டி மாடலிங், கட்டட மேலாண்மை, MEP டிசைன், Value Engineering, Scan to BIM உள்ளிட்ட பல சேவைகளை அளிப்பதாக இது அமைந்துள்ளது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த பின்னக்கிள் நிறுவனத்தின் மையம் மூலமாக 6,000 பேருக்கு, குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.

”தமிழ்நாட்டின் IT புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்”... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், பொருளாதாரத்தை வளர்க்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், தொழில்துறையில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நம்முடைய இலக்கு என்பது தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை பெருக்கி, அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் அடைந்தது என்ற நிலையை எட்டுவது தான். எங்களுடைய இந்த இலக்கை அடைய உதவிடும் வகையில் பின்னக்கிள் போன்ற நிறுவனங்கள் இன்னும் பிற தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக இந்த தருணத்தில் வைக்கிறேன்.

ஐடி என்றாலே கலைஞர் தான். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்தியாவிலேயே முதன்முதலாக 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கி, தமிழ்நாட்டின் ஐடி புரட்சிக்கு வித்திட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து இன்று ராஜீவ் காந்தி சாலை என அழைக்கப்படும் OMR சாலையை தகவல் தொழில்நுட்ப தாழ்வாரமாக வழிவகுத்தார். எதிர்காலம் என்பது டிஜிட்டல் காலம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் கணினி பயில்வதை ஊக்குவித்தார். அவர்கள் மென்பொருள் துறையில் சிறந்து விளங்குவதற்கு காரணமானார்.

”தமிழ்நாட்டின் IT புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்”... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இன்று தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் தான் நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர் அவர்கள். அத்தகைய தலைவர் கலைஞர் நூற்றாண்டில் மதுரையில் அமையும் இந்த பின்னக்கிள் நிறுவன மையம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இதுபோன்ற வளர்ச்சியை விரைவுப்படுத்தி அதன் பயனை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பதை நமது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மெய்ப்பித்து காட்டுவார் என நான் நம்புகிறேன்.

இந்த சிறப்பான முன்னெடுப்பை நிகழ்த்தி காட்டியிருக்கும் இந்த பின்னக்கிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், தமிழ்நாடு மின்னனு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், பின்னக்கிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories