தமிழ்நாடு

”பிரச்சனை உருவாக்குவதே ஆளுநரின் முழுநேர வேலையாக இருக்கு”.. தொல். திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு!

பிரச்சனை உருவாக்குவதையே ஆளுநர் முழுநேர வேலையாக செய்து வருகிறார் என தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”பிரச்சனை உருவாக்குவதே ஆளுநரின் முழுநேர வேலையாக இருக்கு”.. தொல். திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஆவடியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, திருமாவளவன் மணி விழா, அம்பேத்கர் தொழிலாளர் சங்க ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், அரசுக்கு எதிராக ஏதாவது கூறவேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பலரால் வரவேற்கப்பட்டு வருகிறது.இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் பா.ஜ.கவினர் விமர்சிக்கின்றனர்.

”பிரச்சனை உருவாக்குவதே ஆளுநரின் முழுநேர வேலையாக இருக்கு”.. தொல். திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு!

ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார். தமிழ்நாட்டில் இவர்களது முயற்சி முயற்சி எடுபடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். அவருக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் உற்ற துணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories