தமிழ்நாடு

டூவிலர் மீது மோதிய டிப்பர் லாரி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாப பலி !

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாப பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டூவிலர் மீது மோதிய டிப்பர் லாரி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாப பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கி ராஜன் இவரது சகோதரி இசக்கியம்மாள்.இந்த நிலையில் இசக்கிராஜன் தனது சகோதரி இசக்கியம்மாள் தாய் சரஸ்வதி மற்றும் இசக்கியம்மாளின் 2 வயது குழந்தை என நான்கு பேரை தனது இருசக்கர வாகனத்தில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து பாபநாசம் நோக்கி அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

அம்பாசமுத்திரம் பாபநாசம் சாலையில் உள்ள ரயில்வே சந்திப்பு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி ஒன்று இசக்கி ராஜன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு வயது குழந்தை உள்பட நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். இசக்கியம்மாள், சரஸ்வதி மற்றும் 2வயது குழந்தை ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இசக்கி ராஜன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர் மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் டிப்பர் லாரியை விக்கிரமசிங்கபுரம் சேர்ந்த அசோக் என்பவர் ஓட்டி வந்ததும் டிப்பர் லாரியின் முன்பக்க அச்சு முறிந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்த்திசையில் சாலையின் ஓரமாக வந்த இசக்கிராஜனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதும் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது எனவே அம்பாசமுத்திரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுனரை கைது செய்ததோடு லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகன விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு நெல்லை - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாக்குடி அருகே கார் ஒன்று சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர் அதேபோல் நேற்று மாலை கேடிசி நகர் அருகே நடைபெற்ற விபத்தில் ஒருவர் பலியானார் எனவே நெல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories