தமிழ்நாடு

அ.தி.மு.க - பா.ஜ.க மோதலை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை.. ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

தலைமைச் செயலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை அப்பட்டமான விதிமீறல் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க - பா.ஜ.க  மோதலை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை.. ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்ணாமலையின் பேச்சால் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே மோதல் உருவாகியுள்ளதைத் திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்காக என்ன செய்தது என்று பட்டியலிடத் தயாரா? என முதலமைச்சர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குத் தமிழ்நாட்டிற்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் பதில் சொல்ல முடியவில்லை.

அ.தி.மு.க - பா.ஜ.க  மோதலை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை.. ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

அதேபோல் அண்ணாமலையின் பேச்சால் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த விஷயங்களை எல்லாம் திசை திருப்பவே தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இது விதி மீறலாகும்.

மேலும் அமலாக்கத்துறையை கொண்டு தி.மு.க ஆட்சியில் ஊழல் நடைபெறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க முயல்கிறது. இந்த சோதனை காலையிலேயே தொடங்கிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்திக்க வீட்டிற்குச் சென்றோம்.

அ.தி.மு.க - பா.ஜ.க  மோதலை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை.. ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

அங்கிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மனித உரிமையை மீறும் வகையில் இந்த சோதனை நடைபெறுகிறது. தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற்றுத்தான், தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த வேண்டும். ஆனால் இந்த சோதனையில் தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் டி.கே.சிவக்குமாரை குறிவைத்து இப்படித்தான் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தியது. ஆனால் அவர் மீதான எந்த முறைகேடும் நிரூபிக்கப்படவில்லை. அங்கு நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்தது. அதே நிலைதான் இங்கும் உருவாகும்.

இன்னும் 10 அமாவாசை தான் பா.ஜ.க ஆட்சிக்கு இருக்கிறது. அதற்குள் இப்படியெல்லாம் சோதனைகள் நடத்தி தி.மு.க ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் அமலாக்கத்துறை இதுவரை எந்த வழக்கிலும் உரியத் தீர்வை பெற்றுக் கொடுத்தது இல்லை. இவையெல்லாம் மிரட்டல்களுக்கே. இந்த போக்கை பா.ஜ.க நிறுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories