தமிழ்நாடு

”அரசியல் முதிர்ச்சி இல்லாத அண்ணாமலை”.. பாஜக - அதிமுக முற்றும் உச்சக்கட்ட மோதல்: கூட்டணி முறிவு?

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

”அரசியல் முதிர்ச்சி இல்லாத அண்ணாமலை”..  பாஜக - அதிமுக முற்றும் உச்சக்கட்ட மோதல்: கூட்டணி முறிவு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தது பா.ஜ.க. இந்த தேர்தலில் பா.ஜ.க 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் கொண்டுவராததால் கூட்டணி அமைந்ததில் இருந்தே அ.தி.மு.கவிற்குள் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.

அவ்வப்போது இது வெளிப்பட்டு வந்தது. அப்போது எல்லாம் டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி சரிக்கட்டப்படும். அ.தி.மு.கவும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்த பிறகு கூட்டணிக்குள் பெரிய குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

”அரசியல் முதிர்ச்சி இல்லாத அண்ணாமலை”..  பாஜக - அதிமுக முற்றும் உச்சக்கட்ட மோதல்: கூட்டணி முறிவு?

இதனால் பா.ஜ.கவினர் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு பழனிசாமி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது தமிழ்நாட்டிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் சென்றது அ.தி.மு.கவினரை அவமதிப்பதாக அதன் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை "ஊழல் குற்றத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்தான் ஜெயலலிதா" என தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்திற்கு அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவைப் பற்றிப் பேசும் அண்ணாமலைக்கு, நாவடக்கம் தேவை என்று, ஊழல் பற்றி வாய் கிழியப் பேசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஊழலால் கர்நாடகாவில் பாஜக தோற்றது பற்றிப் பேச மறுப்பது ஏன் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”அரசியல் முதிர்ச்சி இல்லாத அண்ணாமலை”..  பாஜக - அதிமுக முற்றும் உச்சக்கட்ட மோதல்: கூட்டணி முறிவு?

அதேபோல், ”ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கோ, பா.ஜ.க.வுக்கோ அருகதை இல்லை. கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களுக்கு பா.ஜ.கவில் பதவி. ஊழலுக்காகக் கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பா.ஜ.க. கட்சியில்தான். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேறலாம்” என சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், "எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளார்" என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை அடுத்து பா.ஜ.கவினரும் அ.தி.மு.கவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதைக் கண்டிக்கிறோம் என பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இப்படி அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் தங்களுக்குள் ஒருவரை மாறி ஒருவர் விமர்சித்து வருவது பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்கவைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories