தமிழ்நாடு

”உண்மைக்கு புறம்பான செய்தி.. ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை” : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

”உண்மைக்கு புறம்பான செய்தி..  ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை” : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஆதாரங்கள் இருந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயார் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "ஆவின் நிறுவனத்தில் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒப்பந்த பணியாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர் நல சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் அரசு நிர்ணயித்துள்ளது. PF, ESI ஆகியவற்றைச் சரிவர வழங்குவதை உறுதிப்படுத்துவதுடன் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

”உண்மைக்கு புறம்பான செய்தி..  ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை” : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது ஆவின் நிறுவனத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் நேரடியாகச் சென்று ஆவினில் ஆய்வு செய்தேன். 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களை ஆவினில் அனுமதிப்பதில்லை. அங்குப் பதிவேடு கடைப்பிடிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் உள்ளது. சிறார்கள் ஆவினில் பணிபுரிப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை. ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத்தயார். இந்த கோடைக்காலத்தில் ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனையில் 10% அதிகரித்து உள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories