தமிழ்நாடு

”பன்னாட்டு நிறுவனங்களில் இன்று தமிழர்கள் இருக்கக் காரணம் கலைஞர்”: வைரமுத்து பெருமிதம்!

பன்னாட்டு நிறுவனங்களில் இன்று தமிழர்கள் வேலைபார்த்து வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் முத்தமிழறிஞர் கலைஞர்தான் என வைரமுத்து பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

”பன்னாட்டு நிறுவனங்களில் இன்று தமிழர்கள் இருக்கக் காரணம் கலைஞர்”:  வைரமுத்து பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் வேளச்சேரி குருநானக் கல்லூரி கலையரங்கில் 'இன்முகத் தலைவரைப் பாடும் இசைபடு கவியரங்கம்' எனும் தலைப்பில் கலைஞர் புகழைப் போற்றி இசையுடன் கூடிய பாடல் உருவாக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், கணபதி, பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மாவட்ட கழக நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

”பன்னாட்டு நிறுவனங்களில் இன்று தமிழர்கள் இருக்கக் காரணம் கலைஞர்”:  வைரமுத்து பெருமிதம்!

இந்நிகழ்வில், பாடலசியர் கபிலன் வரிகளில் "தமிழ்நாட்டின் கலைஞருக்கு 100 வயது. அது எட்டுத்திக்கும் உதயமான இனிய பொழுது. அவர்தான் கலைஞர் என்றபாடலும், "தஞ்சாவூர் ஜில்லாவிலா ஒரு பிள்ள பிறந்துச்சு, தமிழ்நாட்டு விடியல் அதுக்குள்ள இருந்துச்சு" என்ற பாடலும், " கலைஞர் என்னும் போராளி, அவர் சூரியன் ஈன்ற சூறாவளி" என்ற பாடல் மக்கள் முன்னிலையில் பாடப்பட்டது.

அதேபோல், கவிபேரரசு வைரமுத்து வரிகளில் "ஒரே சொல்லில் நூற்றாண்டு கலைஞர். ஒரே சொல்லில் மூன்று தமிழ் கலைஞர். ஒரே சுதியில் கோடி குரல் கலைஞர். ஒரே உடம்பில் பெரியார். அண்ணா, கலைஞர் என்னும் பாடலும் பாடப்பட்டது. கலைஞரை போற்றும் இந்த 4 பாடல்களுக்கு மேடையிலேயே இசையமைப்பாளர் பரத்வாஜ் தலைமையிலான இசைக்குழுவினர் இசையமைத்தனர். இந்த நிகழ்வில் பாடல், இசையில் கலைஞரின் வரலாற்றைக் கூறும் விதத்தில் அமைந்தது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, "வாழ்நாள் முழுக்க எளியவர்களின், சக மனிதர்களின், தமிழர்களின் இந்தியர்களின், உலக மனிதர்களின் துயரத்தோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட தலைவன் நேற்று தனது நூற்றாண்டையும் இந்தியாவின் துயரத்தோடு பகிர்ந்து கொண்டார்.

இந்த விபத்துச் செய்தியை அறிந்தவுடன் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்பி வைத்து இந்தியாவிற்கு முன்னோடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

கலைஞர் புகழை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய வழிகளில் அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது தி.மு.க-வின் கடமையாகும். இது ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்லது.

இன்று நாசா, மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் பணியாற்றி வருகிறார்கள் தான். இந்த நூற்றாண்டு துவக்க நேரத்தில் இதை நாம் அடித்துச் சொல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories