தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு ஆ.ராசா MP சரமாரி கேள்வி!

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்? என தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு ஆ.ராசா MP சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம் புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது.

இந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 747 பேர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு ஆ.ராசா MP சரமாரி கேள்வி!

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்? தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் அழைத்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் குழுவை ஒடிசாவிற்கு அனுப்பிவைத்தார். தென்மண்டல ரயில்வே அலுவலகத்தில் ஒடிசா அதிகாரிகளோடு பேச ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தினார். உடனடியாக உதவி எண் வழங்கினார். இறந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார். தென்னக கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். இவ்வாறு மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார் நமது முதலமைச்சர்.

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு ஆ.ராசா MP சரமாரி கேள்வி!

70,000 கி.மி தூரம் உள்ள ரயில் பாதையில் வெறும் 1,500 கீமி தூரத்திற்கு மட்டுமே காவச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வெறும் 2 சதவீதம்தான். ‘கவாச்’ தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசை முறையாக பயன்படுத்தவில்லை.

ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?ஒன்றிய அரசு வாய் மூடி மௌனமாக இருப்பது ஏன்?. இந்த அரசாங்கம் ஆடம்பரத்திற்கும் தேவையற்ற விளம்பரத்திற்கும் மக்களை திசை திருப்புவதற்கு மட்டுமே முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடைபெற்றதா அல்லது ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். விளம்பரத்தை மட்டுமே நம்பியும் வெறும் பிம்பத்தை வைத்து மட்டுமே ஒன்றியத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

உலகையே உலுக்கிய இந்த துயர சம்பவத்திற்கு கூட பிரதமர் மற்றும் துறையின் அமைச்சர்கள் பேசமறுக்கின்றனர். ரயில் விபத்து நடந்து 24 மணி நேரம் ஆன பிறகும் முறையான விளக்கம் ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. இவர்கள் பதில் அளிக்கவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories