தமிழ்நாடு

'நான் யார் தெரியுமா?'.. குடிபோதையில் பெண் காவலரிடம் தகராறு செய்த பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் மகன்!

சென்னையில் குடிபோதையில் பெண் காவலரிடம் சசிகலா புஷ்பாவின் மகன் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நான் யார் தெரியுமா?'..  குடிபோதையில் பெண் காவலரிடம் தகராறு செய்த பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் மகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க கட்சியின் நிர்வாகியாக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் அ.தி.மு.கவில் இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பிறகு அ.தி.மு.கவில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். இவரது மகன் பிரதீப் ராஜா. இவர் சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிரதீப் ராஜா நேற்று குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் விருகம்பாக்கம் வழியாகச் சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநருடன் தகராறு செய்துள்ளார்.

'நான் யார் தெரியுமா?'..  குடிபோதையில் பெண் காவலரிடம் தகராறு செய்த பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் மகன்!

அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் பிரதீப் ராஜாவிடம் விசாரணை நடத்தினார். இதற்கு அவர் நான் யார் தெரியுமா? என பெண் காவலரிடம் தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பெண் காவலரைத் தாக்க முயன்றார். இது பற்றி அறிந்து அங்கு வந்த சக போலிஸார் பிரதீப் ராஜாவை அங்கிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

banner

Related Stories

Related Stories