தமிழ்நாடு

கர்நாடக சட்டசபைக்குள் நுழையும் 10 பெண் MLA-க்கள்.. யார் யார் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள்?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 10 பெண்கள் பெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைகின்றனர்.

கர்நாடக சட்டசபைக்குள் நுழையும் 10 பெண் MLA-க்கள்.. யார் யார் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. பின்னர் மே 13 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க அரசை தோற்கடித்து 135 தொகுதியில் வெற்றி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த தேர்தலில் பிரதமர் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பா.ஜ.க 66 இடங்களில் மட்டுமே வெற்றி முடிந்தது. அதோடு இந்த தேர்தலில் முக்கியமாக பா.ஜ.கவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.

கர்நாடக சட்டசபைக்குள் நுழையும் 10 பெண் MLA-க்கள்.. யார் யார் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள்?

அதேபோல் இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம், சுயேச்சைகள் என 185 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 10 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று கர்நாடக சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி ஹெம்பல்கர் பெலகாவி ஊரகத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட ரூபா கலா, குல்பர்காவில் போட்டியிட்ட கனீஸ் பாத்திமா, மூடுகெரேவில் நாயனா மோட்டம்மா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதேபோல் பா.ஜ.க சார்பில் மகாதேவபுராவில் போட்டியிட்ட மஞ்சுளா, சுள்ளியாவில் போட்டியிட்ட பாகிரதி முரல்யா, நிப்பானியில் போட்டியிட்ட ஜொள்ளே சசிகலா ஆகிய வெற்றி பெற்றுள்ளனர். இதில் பாகிரதி முரல்யா கர்நாடக சட்டப்பேரவைக்குள் நுழையும் முதல் பட்டியலின பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக சட்டசபைக்குள் நுழையும் 10 பெண் MLA-க்கள்.. யார் யார் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள்?

ம.ஜ.த சார்பில் ஷிமோகா ஊரக தொகுதியில் போட்டியிட்ட சாரதா பூர்யநாயக், தியோதர்கில் போட்டியிட்ட கரீமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். ஹரப்பனஹள்ளி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட லதா வெற்றி பெற்றார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமையில் முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல்வரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சித் தலைமைக்கு வழங்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இந்த இருவரில் ஒருவர்தான் முதலமைச்சராக வருவார்கள் என கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories