தமிழ்நாடு

”திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க முற்றிலும் அகற்றம்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க முற்றிலும் அகற்றம்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 137 இடங்களிலும், பா.ஜ.க 62 இடங்களிலும், ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.

கர்நாடகத்தில் ஆட்சியை இழந்துள்ளதால் தென்னிந்தியாவில் இருந்த ஒரு மாநிலத்தையும் பா.ஜ.க இழந்துள்ளது. தென் மாநிலங்களில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என பா.ஜ.க தலைவர்கள் கூறிய நிலையில் தற்போது தென் மாநிலத்தில் பா.ஜ.க முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

”திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க முற்றிலும் அகற்றம்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்நிலையில் திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டரில், "கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.

கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories