தமிழ்நாடு

போதையில் ஒற்றை காட்டு யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை அதிகரிகள் !

ஒகேனக்கல் வனப்பகுதியில் ஒற்றை யானையிடம் மது போதையில் உள்ள மீசைகார ஆசாமி வம்பிழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் ஒற்றை காட்டு யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை அதிகரிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகளை நாம் சில விலங்குகளிடம் காண முடியும். குறிப்பாக கோபம், பாசம், சோகம் உள்ளிட்ட அனைத்தும் விலங்குகள் நம்மிடமும் வெளிப்படுத்தும். அப்படி கோபப்படும் விலங்குகள் மனிதர்கள் போல் யோசிக்க கூட செய்யாமல், அதன் உரிமையாளரையே தாக்கும். மேலும் அருகில் யார் இருந்தாலும் அது பார்க்காது.

அதிலும் குறிப்பாக இது போன்ற மூர்க்கத்தன்மை யானையிடமே எளிதாக காண முடியும். அதற்கு மதம் பிடித்தால் அருகிலிருப்பவர்கள் யார் என்ன என்று கூட கவனிக்காது. இதனாலே யானை பாகன் முதல், அருகில் இருந்து பார்ப்பவர்கள் வரை என பல உயிர்களும் யானை மூலம் பலியாகி வருகிறது. இதனாலே மக்கள் அனைவரும் யானைகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

போதையில் ஒற்றை காட்டு யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை அதிகரிகள் !

இந்த சூழலில் போதை ஆசாமி ஒருவர், யானை முன் நின்று வம்பிழுப்பது போல் செய்கைகள் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலானதால், அவரை கைது செய்துள்ளனர். அதாவது தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி அவ்வப்போது பென்னாகரம் - ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் வால்வுகளில் இருந்து வெளியேறும் நீரை குடித்துவிட்டு சாலையின் அருகில் நிற்கிறது.

தற்போது ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கோடை விடுமுறையை கொண்டாட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் பென்னாகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் அடர் வானப்பகுதிக்குள் செல்லும் போது சாலையோரம் நிற்கக்கூடிய யானையை கண்டதும் வாகனங்களை நிறுத்து செல்பி எடுப்பதும், கூச்சலிடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றனர்.

போதையில் ஒற்றை காட்டு யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை அதிகரிகள் !

இந்நிலையில் நேற்று கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சாலையோரம் நின்றதை கண்ட மீசைக்கார சுற்றுலா பயணி ஒருவர் மது போதையில் யானைக்கு மிக அருகில் சென்று நினறு சாமி கும்பிடுவதும், மண்ணை தொட்டு கும்பிடுவதும், கையை தூக்கி போஸ் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார் அப்போது அந்த ஒற்றைக் காட்டு யானை தாக்குவது போல் மிரட்டியும் கூட கண்டு கொள்ளமால் மது போதையில் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஒகேனக்கலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒருவர் அந்த நபரின் செயலை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்த நிலையில், அந்த நபர் யார் என்ன என்று வனத்துறையினர் விசாரித்தனர்.

போதையில் ஒற்றை காட்டு யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை அதிகரிகள் !

அப்போது அது பென்னாகரம் அருகே எட்டி குட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பென்னாகரம் வனத்துறையினர் யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசனை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒகேனக்கல் வனப்பகுதியில் ஒற்றை யானை மிரட்டுவது தொடர்கதை இருந்து வரும் வேலையில் தற்போது மது போதையில் உள்ள மீசைகார ஆசாமி அதே யானையிடம் வம்பிழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories