தமிழ்நாடு

சொன்னதை செய்த கவிஞர் வைரமுத்து.. மாணவி நந்தினி வீட்டுக்கு சென்று தங்க பேனாவை வழங்கினார் !

கவிஞர் வைரமுத்து தான் சொன்னபடி மாணவி நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவியை பாராட்டி தங்க பேனாவை வழங்கினார்.

சொன்னதை செய்த கவிஞர் வைரமுத்து.. மாணவி நந்தினி வீட்டுக்கு சென்று தங்க பேனாவை வழங்கினார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது.

அந்த தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியான நிலையில்,திண்டுக்கலில் அரசு உதவி பெரும் பள்ளியான அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.இவருக்கு ஆசிரியர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 600/600 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ள மாணவி நந்தினி, தனக்கு B.Com CA படிக்க வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்துள்ளார்.

சொன்னதை செய்த கவிஞர் வைரமுத்து.. மாணவி நந்தினி வீட்டுக்கு சென்று தங்க பேனாவை வழங்கினார் !

கூலி தொழிலாளியின் மகள் கடின உழைப்பு மூலம் முழு மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ள மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தனது பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் மாணவி நந்தினி.அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் உறுதியளித்துள்ளார். இதையடுத்து எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்துவும் நேரில் சந்தித்து தனது தங்கப் பேனாவை பரிசாக அளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!" என்று குறிப்பிட்டுள்ளார்.

சொன்னதை செய்த கவிஞர் வைரமுத்து.. மாணவி நந்தினி வீட்டுக்கு சென்று தங்க பேனாவை வழங்கினார் !

இந்த நிலையில், தான் சொன்னபடி மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவியை பாராட்டி தங்க பேனா வழங்கினார். தொடர்ந்து, மாணவியின் தந்தை மற்றும் தாயாருக்கும் வாழ்த்து கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஒரு ஏழையின் வீடு எளிய வீடு. அந்த வீட்டிற்கு இன்று அதிகார மையங்கள் எல்லாம் முற்றுகை இடுகின்றன. எளிய குடும்பத்துப் பெண் தமிழ்நாடு அளவிலே அறியப்பட்டு இதற்கு காரணம் என்ன தெரியுமா.? கல்வியின் வெற்றி.

கல்வி உலகம் நந்தினியை கொண்டாட வேண்டும். பெண் குலத்தை கொண்டாடுகிறேன், ஆசிரியர்களே கொண்டாடுகிறேன், மாணவியை கொண்டாடுகிறேன்.ஏழ்மை நிலையிலும் கல்வி பெருகிவரும் என்பதற்கு நந்தினி ஒரு எடுத்துக்காட்டு. தேர்ச்சி பெறாத உலகத்தை நாம் மறந்து விடுகிறோம். தேர்ச்சி பெறாத உலகத்தை கண்காணிக்க வேண்டும்.தோற்றுப்போன மாணவர்களை தத்தெடுத்து கல்வி ஊட்டி அவர்களையும் வெற்றி பட்டியலில் சேர்ப்பதற்கு நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். தோற்றுப் போனவர்கள் மீண்டும் தேர்வு எழுதி யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு எப்படி பரிசுகள் வழங்கப்பட்டதோ, அதேபோல் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்று, அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்” என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories