தமிழ்நாடு

”திராவிட மாடல் எக்காலத்துக்கும் உயிர்ப்புடன் இருந்து சமத்துவம் படைக்கும்”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

காலாவதியான சனாதனத்தைத்தான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆளுநர் பேசி வருகிறார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”திராவிட மாடல் எக்காலத்துக்கும் உயிர்ப்புடன் இருந்து சமத்துவம் படைக்கும்”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் மே 7,8,9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 பொதுக்கூட்டங்களுக்கு தி.மு.க ஏற்பாடு செய்துள்ளது.

அதன் ஒருபகுதியாக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், கண்டோன் மெண்ட் பல்லாவரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதேபோல், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

”திராவிட மாடல் எக்காலத்துக்கும் உயிர்ப்புடன் இருந்து சமத்துவம் படைக்கும்”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நமது கழகத் தலைவர் தளபதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம். கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரூ.4000 நிதியுதவி, புதுமைப் பெண் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 போன்ற மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.

அதேபோல், நம் ஆட்சியில் கொண்டுவந்துள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் உலகத்திற்கே எடுத்துக்காட்டான திட்டமாக இருக்கிறது. மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் பசியின்றி அமர்கின்றனர். அறிவித்த இரண்டே ஆண்டில் மதுரையில் கலைஞர் பெயரிலான நூலகத்தை திறக்க உள்ளோம்.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் செங்கல் மட்டும் வைத்துவிட்டு நின்றுவிடவில்லை. கிண்டியில் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 3 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதுதான் நமது ஆட்சியின் வேகம்.

”திராவிட மாடல் எக்காலத்துக்கும் உயிர்ப்புடன் இருந்து சமத்துவம் படைக்கும்”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐ.பி.எல் போட்டியில் 10 அணி உள்ளது. அதுபோல் அ.தி.மு.க-வில் ஒபிஎஸ், இபிஎஸ், டி.டி.வி. தினகரன், சசிகலா என பல அணிகள் உள்ளது. இத்தனை அணிகளைக் கொண்ட அ.தி.மு.க தனியாக ஒரு ஐ.பி.எல் போட்டியே நடத்தலாம். இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் தாம் எந்த அணியில் இருக்கிறோம் என்ற குழப்பத்தில் உள்ளனர்.

ஆளுநர் திராவிட மாடல் ஆட்சியைக் காலாவதியானது என கூறியுள்ளார். ஆனால் அவர் எப்போதோ காலாவதியான சனாதனத்தைப் பற்றி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பேசிய வருகிறார். திராவிட மாடல் எக்காலத்துக்கும் உயிர்ப்புடன் இருந்து சமத்துவம் படைக்கும்.

நமது திராவிட மாடல் ஆட்சியின் இலவசத் திட்டங்களைக் குறை கூறும் பிரதமர், கர்நாடக மாநில தேர்தலில் மக்களுக்கு இலவசத் திட்டங்களை வாரி வழங்கி வருகிறார். கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை நாம் சென்ற ஆண்டு தொடங்கினோம். நாம் கொண்டுவந்த இந்த திட்டத்தைப் பார்த்து கர்நாடக தேர்தலில் பெண்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டும் பிரதமர் வேட்பாளரை வெற்றி பெற செய்ய நாம் அனைவரும் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories