தமிழ்நாடு

“அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் ஆளுநர் பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்” : கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் ஆளுநர் பதவியில் நீடிக்க அருகதை அற்றவர். ஆளுநருக்கு எதிராக விரைவில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் ஆளுநர் பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்” : கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சையில் தியாகி வெங்கடாஜலம், இரணியன், ஆறுமுகம், சிவராமன் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாடு ஆளுநர் அடாவடித்தனமாக இருக்கிறார், அவர் ஆளுநராக இருக்க அருகதை இல்லை. தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சர்ச்சை எழுப்பக்கூடிய நிலையில் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு அரசியல்வாதியைப் போல், தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டுள்ளார்.

“அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் ஆளுநர் பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்” : கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

ஆளுநர் தமிழ்நாடு அரசின் தலைவர். அவருக்கு சட்டம் வகுத்து இருக்கககூடிய வரம்புகளுக்குட்பட்டு தான் செயல்பட முடியும். ஆனால், ஆளுநர் அந்த வரம்புகளை மீறி, ஒரு ஆர்.எஸ்.எஸ் அடிமட்ட தொண்டன் போல பேசுவது கண்டனத்துக்குரியது. சட்டப்படி மந்திரி சபையின் அடிப்படையில் கொடுக்கும் உரையை தான் ஆளுநர் படிக்க வேண்டும்.

அந்த உரையை மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ, படிக்க மறுப்பதற்கோ உரிமை இல்லை என சட்டம் கூறுகிறது. ஆனால் அதை எல்லாம் மீறி ஆளுநர் தான் படித்த தான் சட்டம் என பேசுகிறார். சிதம்பரத்தில் தீட்சிதர்கள் சட்டத்தை மீறி குழந்தை திருமணம் நடத்துவதால், அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் அவர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்.

“அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் ஆளுநர் பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்” : கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

அரசின் மீது இவருக்கு பிரச்சனை இருந்தால், அமைச்சர்களோடு நேரடியாக பேசலாம், முதலமைச்சரோடு பேசலாம், கடிதம் வாயிலாக தெரிவிக்கலாம். ஆனால் பொதுத்தளத்தில் பேட்டி மூலமாக தெரிவிப்பது தவறானவை. இதே போக்கில் ஆளுநர் திரும்பத் திரும்ப செயல்பட்டு கொண்டு இருப்பதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. விரைவில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து இந்த ஆளுநரை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம்” என அவர் தெரிவித்தார்

banner

Related Stories

Related Stories