தமிழ்நாடு

“பாரம்பரிய கலைகள் & உணவு திருவிழா..” : தூத்துக்குடியில் களைகட்டிய நெய்தல் விழா - வியந்து பார்த்த மக்கள்!

தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் களைகட்டிய பாரம்பரிய கலைகள் பொதுமக்களை மகிழ்வித்த உணவு திருவிழா

“பாரம்பரிய கலைகள் & உணவு திருவிழா..” : தூத்துக்குடியில் களைகட்டிய நெய்தல் விழா - வியந்து பார்த்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடியில் கடந்த 21ஆம் தேதி முதல் நான்காவது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த புத்தக கண்காட்சி வளாகத்தில் நெய்தல் கலை விழா நேற்று தொடங்கி மே 1ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நெய்தல் கலை விழாவில், 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

“பாரம்பரிய கலைகள் & உணவு திருவிழா..” : தூத்துக்குடியில் களைகட்டிய நெய்தல் விழா - வியந்து பார்த்த மக்கள்!

2வது நாளான கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் சலங்கையாட்டம், கலைவாணர் கலைக்குழு பெரும்முரசாட்டம், தூத்துக்குடி நெய்தல் எழுத்தாளர்கள் சார்பில் கழியல் ஆட்டம் சிலம்பாட்டம் இதைத்தொடர்ந்து ஆத்தங்குடி இளையராஜா - மீனாட்சி இசைக்குழுவின் கிராமிய பாடல்கள், கானா முத்து இசைக்குழு சார்பில் கானா பாடல் என நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்தது மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை காண வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். மேலும் கலைத்திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில், 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

“பாரம்பரிய கலைகள் & உணவு திருவிழா..” : தூத்துக்குடியில் களைகட்டிய நெய்தல் விழா - வியந்து பார்த்த மக்கள்!

இந்த திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இந்த உணவுத் திருவிழாவை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பார்வையிட்டு உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

இதுபோல் ஏராளமான பொதுமக்களும் உறவு திருவிழாவை கண்டு உண்டு மகிழ்ந்தனர். இது மட்டுமின்றி பாரம்பரிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். ஒரு பக்கம் புத்தக கண்காட்சி, ஒரு பக்கம் பாரம்பரிய கலைகள் மற்றும் உணவு திருவிழா என பொதுமக்களை திக்கு முக்காட செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

“பாரம்பரிய கலைகள் & உணவு திருவிழா..” : தூத்துக்குடியில் களைகட்டிய நெய்தல் விழா - வியந்து பார்த்த மக்கள்!

இதை மிகவும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் பாரம்பரிய உணவுகளையும் மிகவும் தங்களைக் கவர்ந்ததாக இளைய தலைமுறை என தெரிவித்தனர் . இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன், தமிழரசி, ரவிக்குமார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories