தமிழ்நாடு

கந்து வட்டி.. தாக்குதல்.. பேராசிரியர் மனைவியிடம் அத்துமீறல்.. இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் கைது !

பல்கலைக்கழக பேராசிரியரின் மனைவியை கந்து வட்டி கேட்டு மிரட்டியதோடு, அவரை தாக்கியுள்ள இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்து வட்டி.. தாக்குதல்.. பேராசிரியர் மனைவியிடம் அத்துமீறல்.. இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக இருக்கும் இவர் வட்டிக்கு விடும் தொழிலையும் செய்து வருகிறார். இந்த சூழலில் இவரிடம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த கீதா என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 3 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார்.

கந்து வட்டி.. தாக்குதல்.. பேராசிரியர் மனைவியிடம் அத்துமீறல்.. இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் கைது !

கீதாவின் கணவர் பாலகுமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். எனவே ராஜபாண்டியனுக்கு மாதாமாதம் பாலகுமார் வட்டி செலுத்தி வந்துள்ளார். இந்த சூழலில் ராஜபாண்டியன் தொடர்ந்து அதிக வட்டி கேட்டுள்ளார். மேலும் ஒரு மாத வட்டி கட்டவில்லை என்பதால் கீதாவின் வீட்டுக்கே சென்று ராஜபாண்டியன் சண்டையிட்டுள்ளார்.

கந்து வட்டி.. தாக்குதல்.. பேராசிரியர் மனைவியிடம் அத்துமீறல்.. இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் கைது !

அந்த நேரத்தில் கணவர் பாலகுமார் இல்லாததால், கீதாவே அவரை பேசி சமாதானம் படுத்த முயன்றுள்ளார். ஆனால் கீதாவை ஆபாசமாக பேசிய ராஜபாண்டியனை கீதா வீடியோ எடுத்துள்ளார். இதனால் மேலும் கோபம் கொண்ட ராஜபாண்டியன் கீதாவின் மொபைல் போனை பிடுங்கி அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் கீதாவுக்கு கழுத்து, முதுகு, தலை உள்ளிட்ட பகுதிகளில் இலேசான காயம் ஏற்பட்டுள்ளது.

கந்து வட்டி.. தாக்குதல்.. பேராசிரியர் மனைவியிடம் அத்துமீறல்.. இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் கைது !

இதையடுத்து இதுகுறித்து கணவர் பால்குமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் கீதாவும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட கீதா பாளையங்கோட்டை போலிசில் தன்னை கந்து வட்டி கேட்டு மிரட்டி ஆபாசமாக பேசி கீழே தள்ளி விட்டதாக இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் ராஜபாண்டியன் மீது புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ராஜபாண்டியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தனர். ஏற்கனவே ராஜபாண்டியின் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories