தமிழ்நாடு

“கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருக்காது..” - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி !

கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு இருக்காது எனவும், 3 மாத காலத்துக்கு தேவையான மின்சாரத்திற்கான டெண்டர் மூலம் கோரப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்

“கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருக்காது..” - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கரூர் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு இடங்களில் ரூ 10 கோடி மதீப்பீட்டில் சாலை, சமுதாய கூடம், மயான கொட்டகை உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

“கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருக்காது..” - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி !

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது என்றார். இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் கோடையில் மின்தட்டுப்பாட்டை தவிர்க்க 3 மாத காலத்துக்கு தேவையான மின்சாரம் டெண்டர் மூலம் கோரப்பட்டுள்ளது. டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கு 1,312 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. 2 மாத காலத்துக்கு முன்னர் 40 கோடி மின் யூனிட் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். எத்தவித தடையும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டது.

கோடை காலத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பரிலேயே டெண்டர் விடப்பட்டது. ஒரு யூனிட்டு ரூ 8.50 மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் இல்லாமல் கடந்த அதிமுக ஆட்சியில் நடைமுறையிலிருந்த எக்சேன்ஜில் மின்சாரம் வாங்கியிருந்தால் 12 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

“கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருக்காது..” - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி !

கோடை காலத்தில் ஒரு நொடிப்பொழுது மின்தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் மின்சாரம் தேவைப்பட்டாலும் மின்வாரியம் சமாளிக்க தயாராக உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. துறை ரீதியாக எந்தெந்த கடைகள் மூடலாம் என்று ஆய்வு செய்யப்பட்டு அந்த கடைகள் மூடப்படும். ஏற்கனவே 96 கடைகள் மூடப்பட்டுள்ளன. இவையும் சேர்த்து 596 கடைகள் மூடப்பட உள்ளது. புதிதாக டாஸ்மாக் கடைகளை திறப்பது இல்லை. இடமாற்றம் செய்யப்படும் கடைகளை புதிய கடைகள் திறப்பதாக தவறாக புரிந்து கொள்கின்றனர்" என்றார்

“கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருக்காது..” - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி !

மேலும் கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாத வண்ணம் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் துறை சார்பாக புகார்கள் ஏதும் இருப்பின் மின்னகம் சேவை மைய எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும்.

காற்றாழை மின்சாரம் இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் சீராக மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் கைவசம் கூடுதலாகவே கையிருப்பில் இருக்கிறது' என்றார்.

banner

Related Stories

Related Stories