தமிழ்நாடு

‘அண்ணாமலை சாரை டேமேஜ் பண்றீங்க..’ : செய்தி சேகரிப்புக்காக பேசிய பத்திரிகையாளரிடம் அழுத பாஜக நிர்வாகி!

அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பிற்கு Roots Tamil யூடியூப் சேனலை அனுமதிக்க முடியாது என பா.ஜ.க நிர்வாகி கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அண்ணாமலை சாரை டேமேஜ் பண்றீங்க..’ : செய்தி சேகரிப்புக்காக பேசிய பத்திரிகையாளரிடம் அழுத பாஜக நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே, தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றெல்லாம் கதை விட்டு வருகிறார். அதேபோன்று இவரின் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.

இதனால் இவர் பேசும் கருத்துக்களுக்கு எவ்விதமான விளக்கம் சொல்ல முடியாமலும், வெளியே தலைகாட்ட முடியாமலும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் இருந்து வருகின்றனர். இதன்காரணமாக பா.ஜ.க மூத்த தலைவர்களுக்கும் அண்ணாமலைக்குக் கட்சிக்குள் மோதல் போக்கு இருந்து வருகிறது.

அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் கேள்வி கேட்கும் செய்தியாளர்களை ஒருமையில் பேசியும் மிரட்டி வருவதை அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார். அண்மையில் கூட ரபேல் வாட்ச் பில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது ஒருமையில் திட்டினார்.

‘அண்ணாமலை சாரை டேமேஜ் பண்றீங்க..’ : செய்தி சேகரிப்புக்காக பேசிய பத்திரிகையாளரிடம் அழுத பாஜக நிர்வாகி!

அதோடு 40 ஆயிரம் ரூபாய் கேமரா வாங்கிவந்துட்டு டிஜிட்டல் மீடியா கேட்டும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லனுமா, உங்களை எல்லாம் இனி உள்ளேயே விட மாட்டோம் என மிரட்டினார். இவரின் இந்த பேச்சுக்குப் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து Roots Tamil யூடியூப் சேனல் செய்தியாளர் பா.ஜ.க கட்சியின் நிர்வாகி ரங்கநாதன் என்பவருக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அப்போது அவர், 'உங்கள் சேனலுக்கு அனுமதி கிடையாது. குறிப்பாக கரிகாலனை அனுமதிக்க மாட்டோம்' என கூறியுள்ளார். இதற்கு அந்த செய்தியாளர் ஏன் என விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர், 'உங்களை மூன்று முறைக்கு மேல் எச்சரிக்கை செய்து விட்டும். நீங்கள் தேவையில்லாத கேள்விகளை கேட்டு வேண்டும் என்ற பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள். உங்களை அனுமதிக்க முடியாது" என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

கமலாலயத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் யூடியூப் சேனல்களை உள்ளே விடமாட்டோம் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதன் எதிரொலியாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories