தமிழ்நாடு

”தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது”.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழ் மொழியின் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

”தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது”..  ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் "தமிழ்நாடு தர்ஷன்" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறும் உண்டு. இந்தி மொழியை விடத் தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது இந்து உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது.

”தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது”..  ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழை ஆழமாகப் படிக்க வேண்டும். நீங்கள் தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.

திருக்குறள் மனித சமூகத்திற்குத் தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும். திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன" என தெரிவித்துள்ளார்.

”தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது”..  ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

'சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்கக் கால நிர்ணயம் வேண்டும்' என சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை அடுத்து தமிழ் மொழியின் மீது இந்தியைத் திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories