தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன ?

தமிழ்நாட்டில் 5320 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் இந்தாண்டு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு பதிலளித்தார்.

தொடர்ந்து தனது துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

  • 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

  • இந்த ஆண்டு 72 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்.

  • முக்கிய நகரங்களில் செல்லும் மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும்.

  • மின்பாதையில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன ?
  • வட சென்னை அனல்மின் நிலையம் 1 மற்றும் 2-ன் செயல்திறனை மேம்படுத்த ரூ.154.08 கோடியில் சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • ரூ.16.68 கோடியில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் மேம்படுத்தப்படும்.

  • மேட்டூர் அனல் மின் நிலையம் 1@2 ஆகியவற்றை மேம்படுத்த ரூ.21.68 கோடியில் சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீலகிரி மோயர் புனல் மின் நிலையத்தின் உயர் அழுத்த நீர் எடுத்து செல்லும்

  • குழாய்கள் மாற்றி அமைக்கப்படும்.

  • ரூ. 6.95 கோடியில் கீழ் மேட்டூர் கதவணை

  • நிலையம் - 1 ற்காக திடக்கழிவுகளை சுத்தம் செய்யும் Trash Rack Cleaning Machine வாங்கப்படும்.

  • பில்லூர், நிராலப்பள்ளம் திருப்பு அணை, பாபநாசம் திருப்புஅணை மற்றும் அவலாஞ்சி அணைகளில் ரூ. 78.25 கோடியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை (Main Load Dispatch Centre-MLDC) GOLDIT& ரூ. 4 கோடி ஒதுக்கீடு.

  • மாநில மின்பகிர்ந்தளிப்பு மையத்திற்கு (Main Load Dispatch Centre-MLDC) புதிதாக தகவல் தொழில்நுட்பப்பிரிவு உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன ?
  • மின்னூட்டம் உள்ள போதே பழுதுகளை சரிசெய்யும் நவீன இன்சுலேட்டட் ஏரியல் பக்கெட்டுடன் கூடிய வாகனம் வாங்கப்படும்.

  • வட சென்னை அனல் மின் நிலையம் -1 வளாகத்திற்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரியைக் கையாள புதிய வேகன் டிப்ளர் இயந்திரம் நிறுவப்படும்.

  • ரூ.1.50 கோடியில் தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநகரத்தில் 100 கி.வாட் திறன் கொண்டசூரிய சக்தியால் இயங்கும் வாகன மின்னூட்டல் நிலையம் (Solar based EV Charging)நிறுவப்படும்.

  • மேலு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 5329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன இதில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories