தமிழ்நாடு

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!

கிடப்பில் கிடந்தால் நிராகரிப்பு என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக அரசு மேற்கொண்ட இத்தகைய நகர்வை பெரிதும் எதிர்பாத்திருக்கமாட்டார்.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவிலேயே சுயமரியாதை சுடரை அணையவிடாமல் பாதுகாக்கும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். அத்தகைய சுடரை பாதுகாக்கும் பொறுப்பை தந்தை பெரியார் தொடங்கினார். பின்னர் அந்த அணையா சுடரை ஆட்சி அதிகாரித்தின் மூலம் மிளிரச் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாவிற்கு பின்னால் அதனை அணையவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு முத்தமிழறிஞர் கலைஞரிடம் சென்றது.

அப்போது தலைவர் கலைஞர் கையில் வந்த சுடர் முன்பை விட இன்னும் பிரகாசமாய் எரிந்தது. பல இன்னல்களை கடந்து அந்த சுடரை தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கையில் ஒப்படைத்தார் தலைவர் கலைஞர். இன்று அந்த சுடர் அருகில் எவரும் நெருங்க முடியாத பாதுகாப்பு அரணை கம்பீரமாக கட்டி எழுப்புயுள்ளார் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், தமிழ்நாடு ஒருபோதும் பணிந்ததே இல்லை. அதற்கு காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை அனுப்பி நிர்வாக ரீதியாக அம்மாநில அரசை முடக்கும் செயலை தனது உத்தியாக கொண்டுள்ளது.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!
DELL

கடந்த காலங்களில் ஒன்றிய பா.ஜ.க அரசின் கட்டளைகளுக்கு அடிபணிந்த அதிமுக, இன்றளவும் பா.ஜ.க கூட்டணியை விட்டுகூட வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே கொள்கை ரீதியாக கூட்டணியை உருவாக்கிய தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.கவிற்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தை வீரியமுடன் நடத்தி வருகிறது.

சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் என பா.ஜ.க.விற்கு எதிராக வியூகம் அமைத்து தோற்கடித்து வந்துள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின். படுமோசமான தோல்வியை சந்தித்த பா.ஜ.க, மத்தியில் உள்ள ஆட்சி மூலம் தி.மு.க அரசை அசைத்து பாக்க எண்ணுகிறது. ஆனால் எந்த அசைவுக்கும் பிடிக்கொடுக்காமல் ஆட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதுமட்டுமல்லாது ஆளுநருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையையும் கொடுத்து வருகிறார். அதேநேரத்தில் ஆளுநரின் செயல்பாடுக்கு சட்டரீதியான பதிலடியையும் முதலமைச்சர் தவறாமல் கொடுத்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு கொடுத்த பட்ஜெட் உரையை வாசிக்காமல் தவிர்த்த ஆளுநருக்கு அவையிலேயே பதிலடி கொடுத்தார்.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!

உடனே விழி பிதுங்கிய ஆளுநர் அவையில் இருந்து உடனே நடையைக் கட்டியது எல்லாம் நாம் கண்டிருப்போம். அடுத்ததாக ஒரு ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பது மரபாக இருக்கும்போது, தனது பொறுப்பை மறந்து பொதுவெளியில் சமூகநீதிக்கு எதிராகவும், பெரியார், அம்பேத்கர் மற்றும் கார்ல் மார்க்ஸ் கருத்தியலுக்கு எதிராகவும், இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த இரட்டிப்பு வேலைகளை எல்லாம் பேசியும் செய்தும் வந்தார்.

அதுமட்டுமல்லாது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளது. ஆனால் ஆர்.என்.ரவி எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தார். குறிப்பாக 47 பேருக்கு மேல் பலியான ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டை தடை செய்யவேண்டும் என அனுப்பட்ட மசோதாவை 131 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார். அதோடு இல்லாமல் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் கூறினார்.

ஆளுநர், மசோதவை திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப் படுத்துதல் சட்டமுன்வடிவு - 2022 என்பதை தமிழ்நாடு சட்டமன்றம் இரண்டாவது முறையாக கடந்த மார்ச் 25ம் தேதி நிறைவேற்றியது.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!

இதனை அறிமுகம் செய்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் தனது உரையைத் தொடங்கும் போதே, ''மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து இதுவரை 41 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறதே... என்ற வேதனையுடன் தான் எனது உரையை நான் தொடங்குகிறேன்" என்றுதான் உரையைத் தொடங்கினார்கள்.

பந்தயம், சூதாட்டம் ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்தின் 7 ஆவது அட்டவணையில் 34 ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7 ஆவது அட்டவணை 34 ஆவது பிரிவில் உள்ளவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை மாநில அரசுகளே இயற்ற முடியும்" என்று சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஆளுநர் சொன்ன காரணம், இழுத்தடிப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட பொய் காரணம் என்று புரியவில்லையா?

இந்த அடிப்படையில்தான் மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று சொல்லி இந்த சட்டமுன்வடிவை முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். 'எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்' என்ற சோகக் குரலும், என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது' என்ற அழுகுரலும், இனியொரு முறை இந்த மாநிலத்தில் எழக் கூடாது.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!

எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும்" என்று சொல்லிவிட்டு, ''மனச்சாட்சியை உறங்கச் செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன்" என்று முழங்கினார் முதலமைச்சர்.

இதனைத் தொடர்ந்து, அண்மையில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும் போது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. முதலாவது மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது. இரண்டாவது மசோதாவை நிறுத்தி வைப்பது. மூன்றாவது வாய்ப்பு அந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது. நிறுத்தி வைப்பது என்றாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிராகரிக்கப்பட்டது என்ற வார்த்தைக்கு பதிலாகவே நிறுத்திவைப்பு என்னும் வார்த்தையை பயன்படுத்துகிறோம் என ஆளுநர் கூறியுள்ளார்.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனிடையே பல்வேறு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் கொடுக்க வேண்டிய மரியாதை கொடுத்தும், மேலும் அதேவேளையில் ஆளுநர் ஒப்பதல் அளிக்காத மசோதா குறித்து எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் இன்று சட்டப்பேரவைக் கூடியதுமே, “தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும்” - என தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (10-4-2023) அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அந்த உரையில், “இந்த ஆண்டு “ஆளுநர் உரை” கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டு, இன்னும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள், இரண்டாவது முறையாக ஆளுநர் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!

ஆனால் ஆளுநர் அவர்கள், அரசியல் சட்டத்தையும் கடந்து, ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும், ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார். அவர் ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகப் பேசுகிறார். அந்தப் பதவிக்கு என்னென்ன தகுதிகளைச் சர்க்காரியா அறிக்கை வரையறுத்துக் கூறியுள்ளதோ, அந்தத் தகுதிகளையெல்லாம் மறந்துவிட்டுப் பேசுகிறார்.

அதுவும் குறிப்பாக, பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ, தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!

அதற்கு மேல் சென்று, “withhold” என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என்று ஆளுநர் விதண்டாவாதமாக பேசுகிறார். இந்த “withhold” அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக் கூட அறியாதவர் போல் பேசுகிறார். அரசியல் சட்டப் பிரிவு 200-இன்கீழ் “ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவைச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவிட்டால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி ஆளுநருக்கு இல்லை” என்பதே தெளிவு.

தமிழ்நாடு சட்டமன்றத்தை, இறையாண்மை மிக்க இந்த நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை “அரசியல் பவனாக” மாற்றிக் கொண்டிருக்கிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.

ஆளுநரை விமர்சிக்கிறோம் என்றால் அவரை தனிப்பட்ட முறையில் அல்ல; ஆளுநரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு, பதிலுக்குப் பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை.

“கிடப்பில் கிடந்தா நிராகரிப்பா?” : ரவியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த திமுக அரசு - பணிந்த ஆளுநர்!

அதேநேரத்தில், சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் நோக்கத்துக்காக, அரசியல் லாப நஷ்டங்களுக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக, நாம் இந்த அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது இல்லை. எடுத்தவுடன் சட்டம் போடுவதும் இல்லை. நீட் விலக்குச் சட்டமாக இருந்தாலும், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமாக இருந்தாலும், எத்தனைக்கட்ட பரிசீலனைக்குப் பிறகு இவற்றை நிறைவேற்றினோம் என்பதை இந்த அவைக்கு விளக்கத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த ஆளுநர் தொடர்பாக பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதியை தளர்த்துவதற்கான தீர்மானமும் நிறைவேறியது. இந்த தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 144 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. பின்னர் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானமும் நிறைவேறியது.

ஆளுநருக்கு பதிலுக்கு கண்டன அறிக்கையை விடாமல், அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரித்தின் அடிப்படையில் ஆளுநருக்கு பதிலடியை கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பதிலடியால் அடுத்த ஒரிரு மணிநேரங்களிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். கிடப்பில் கிடந்தால் நிராகரிப்பு என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக அரசு மேற்கொண்ட இத்தகைய நகர்வை பெரிதும் எதிர்பாத்திருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Related Stories