தமிழ்நாடு

45 கிலோ மீட்டர்.. 32 நிலையங்கள்.. நகரத்தின் அழகை மெருகூட்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சிறப்பு பகிர்வு

`அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ செல்லும் அடுத்த ரயில் முதலாம் நடைமேடையில் வந்துகொண்டிருக்கிறது.' - சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த அனைவராலும் இனிமையான குரலில் வரும் இந்த அறிவிப்பை கேட்டிருக்க முடியும்.

45 கிலோ மீட்டர்.. 32 நிலையங்கள்.. நகரத்தின் அழகை மெருகூட்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சிறப்பு பகிர்வு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : நெரிசலற்ற நெடும்பயணம்!

தென்சென்னையிலிருந்து வடசென்னைக்கோ, வடசென்னையிலிருந்து தென்சென்னைக்கோ செல்ல வேண்டும் என்றால், குறைந்தபட்சம் இரண்டு மூன்று பேருந்துகள் அல்லது ஷேர் ஆட்டோக்கள் மூலம்தான் சென்றடைய வேண்டும். நேரவிரயம், மனஉளைச்சல் கொண்ட அந்தப் பயணம் பலருக்கும் அலுப்பூட்டிவிடும். ஆனால், இன்று அந்த இரண்டு புவிப்பரப்பை இணைக்கும் ஒன்றாக மெட்ரோ ரயில் விளங்குகிறது. அதுவும் சில நிமிடங்களில்!

45 கிலோ மீட்டர்.. 32 நிலையங்கள்.. நகரத்தின் அழகை மெருகூட்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சிறப்பு பகிர்வு

சென்னையின் மொத்தத்தையும் ஊடறுத்துச் செல்லும் மெட்ரோ ரயிலின் கட்டுமானங்கள் தொடர்ந்து வளர்ந்த வண்ணமே இருக்கின்றன. சென்னை போன்ற வளர்ந்து வரும் நகரத்துக்கு மெட்ரோ ரயில் கட்டுமானம் என்பது, சில ஆண்டுகளில் முடிந்துவிடும் திட்டமல்ல. நகரத்தின் தேவைக்கேற்ப வளர்ந்துகொண்டே செல்லும் திட்டம்.

இந்திய அளவில் கொல்கத்தாவும், டெல்லியும் மெட்ரோ உருவாக்கத்தில் முன்னோடி நகரங்கள். வளர்ச்சியின் தொடர் ஓட்டத்தில், சென்னை பின் தங்கி விடக்கூடாது என்ற காரணத்தால், இங்கும் மெட்ரோ ரயில் அமைக்கவேண்டும் என்ற திட்டத்தை கலைஞர் கொண்டிருந்தார்.

துரிதமான, தூய்மையான பயணம்

உலகமயமாக்கலின் நன்மையை மிக விரிவாகவும், விரைவாகவும் அடைந்திருந்த தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, வேலை தேடி வரும் பிற மாவட்ட மக்களுக்கு அடைக்கலம் தரும் இடம். பெருகும் வேலைவாய்ப்பினால் மக்களின் இடப்பெயர்வு சென்னை நோக்கி அதிகரிக்கிறது. இது ஏற்படுத்தும் மக்கள் நெரிசல் போக்குவரத்து நெரிசலாக உருமாறி இருந்தது. சென்னையின் சாலைகள் நெரிசல் காரணமாக வாகனங்களைக் கையாளுவதில் சிரமப்படுகின்றன.

45 கிலோ மீட்டர்.. 32 நிலையங்கள்.. நகரத்தின் அழகை மெருகூட்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சிறப்பு பகிர்வு

இப்படியான சூழலில்தான் கலைஞர் மெட்ரோ ரயிலுக்கான‌ அறிவிப்பை 2007-ஆம் ஆண்டு வெளியிட்டார். பொதுப் போக்குவரத்தின் அடுத்த பரிணாமம் மெட்ரோ ரயில் என்பதை கலைஞர் மிகச் சரியாகக் கண்டடைந்திருந்தார். மெட்ரோ ரயில் திட்டத்தின் பெரும்பகுதியைத் தொடக்கம் முதல் கவனித்து வந்தவர், அன்றைய துணை முதலமைச்சரும் இன்றைய முதலமைச்சருமான கழகத் தலைவர் அவர்கள்.

பெருகி வந்த வாகன நெரிசல் ஏற்படுத்திய காற்று மாசும், ஒலி மாசும் சென்னை மீதான பார்வையையே மெல்ல மெல்லச் சிதைத்துக் கொண்டிருந்தன. மெட்ரோ ரயில் இதை எல்லாம் வெகுவாகக் குறைக்கிறது. துரிதமாக, தூய்மையாக அதே நேரத்தில் குளிரூட்டப்பட்ட பயண அனுபவத்தை மெட்ரோ ரயில் வழங்குகிறது.

அ.தி.மு.க. மோனோ ரயில் தோல்வி!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளைச் செயல்படுத்தவும், மேற்பார்வை யிடவும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் என்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் - ஒன்றிய அரசும் இந்நிறுவனத்தின் கூட்டுப் பங்குதாரர்களாக விளங்குகிறார்கள். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஆணையம் வழங்கிய கடன் மூலம் சென்னை மெட்ரோ ரயிலுக்கான முதல் கட்ட பணிகள் 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன‌.

45 கிலோ மீட்டர்.. 32 நிலையங்கள்.. நகரத்தின் அழகை மெருகூட்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சிறப்பு பகிர்வு

32 நிலையங்கள், இரண்டு வழித் தடங்கள் என மொத்தம் 45 கிமீ நீளத்துக்கு இந்த முதல் கட்ட மெட்ரோ ரயில் கட்டமைப்பு அமைந்திருந்தது. இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், மெட்ரோ கட்டுமானப் பணிகள் சுணக்கமடைந்தன. கலைஞர் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக `மோனோ ரயில்' என்ற திட்டம் மெட்ரோ ரயிலுக்கு எதிராக அ.தி.மு.க. அரசால் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அதற்கான செயல்பாட்டுச் சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருந்தன என்பதாலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்த காரணத்தாலும் மெட்ரோ ரயில் பணிகள் செயல்படுத்தப்பட்டு 2015-ஆம் ஆண்டு ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 7 நிலையங்கள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டன.

2015-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டிருக்க வேண்டிய மெட்ரோ ரயில் பணிகள் 2019-ஆம் ஆண்டு வரை நீண்டதற்கு அரசியல் காழ்ப்புதான் காரணமாக இருந்தது.

45 கிலோ மீட்டர்.. 32 நிலையங்கள்.. நகரத்தின் அழகை மெருகூட்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சிறப்பு பகிர்வு

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் - 1

தூரம் : 45 கிலோ மீட்டர்

 நிலையங்கள் : 32

 தடங்களின் எண்ணிக்கை : 2

 தடம் 1 : வண்ணாரப்பேட்டை டூ சென்னை விமான நிலையம்

 தடம் 1 நீட்சி : வண்ணாரப்பேட்டை டூ விம்கோ நகர் வரை

 தடம் 2 : சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரை

 திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 2009

நகரத்தின் அழகை மெருகூட்டிய ரயில்மெட்ரோ ரயிலின் முதல் கட்டம் சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களை இணைத்திருந்தது.

மேலும் சைதாப்பேட்டை, கிண்டி, வண்ணாரப் பேட்டை, பிராட்வே, பூங்கா நகர், பரங்கிமலை, ஜார்ஜ் கோட்டை ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்களுக்கு அருகிலேயே மெட்ரோ நிலையம் அமைந்திருந்தது. இதன் மூலம் ஒரு போக்குவரத்து சேவையிலிருந்து மற்றொரு போக்குவரத்துச் சேவைக்கு மாறிக்கொள்ளும் வகையிலும் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

45 கிலோ மீட்டர்.. 32 நிலையங்கள்.. நகரத்தின் அழகை மெருகூட்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சிறப்பு பகிர்வு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதிக்கும் அதிகமான நிலையங்கள், சுரங்க ரயில் நிலையங்களாகவே அமைக்கப்பட்டன‌. அதுவரை சாலைக்கு மேலே பயணித்துக் கொண்டிருந்தவர்களைச் சுரங்கத்துக்குக் கடத்தியதன் மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்க முடிந்தது.

வரலாற்றுக் கட்டடங்களையும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் அதிகம் கொண்ட சென்னை மாதிரியான நகரத்தில், சுரங்க ரயில் என்பதே சிறப்பான கட்டமைப்பாக இருந்தது.நகரத்தின் அழகையும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானங்களையும் பாழ்படுத்தாத வகையில் மெட்ரோ ரயில் கட்டுமானங்கள் அமைந்துள்ளன. சுரங்கத்தில் ரயில் நிலையம் அமைக்கக் காலமும் செலவும் அதிகம் என்றாலும், அரசு ஒப்புதல் அளித்தது.

எட்டுத்திக்கும் மெட்ரோ!

இன்றைக்கு மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கப்பட்டு, சீரிய முறையில் நடந்து வருகின்றன‌. சென்னை நகரத்தில் அனைத்து முக்கிய இடங்களையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் உருவெடுக்கவுள்ளது.

45 கிலோ மீட்டர்.. 32 நிலையங்கள்.. நகரத்தின் அழகை மெருகூட்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சிறப்பு பகிர்வு

அதற்கு முன்னோட்டமாக, தேனாம்பேட்டையில் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் நமது திராவிட மாடல் அரசால் 2022-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தமிழ் காக்க ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த போது தொடங்கிய கலைஞரின் ரயில் காதல், தனது இறுதி நாட்களில் சொந்த ஊரான திருவாரூருக்கு ரயிலில் செல்லும் வரை தொடர்ந்தது.

அவர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் நமது இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களும் மெட்ரோ ரயிலின் அடுத்தக் கட்ட விரிவாக்கத்தை மிகச் சிறப்பாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

...வலம் வருவோம்

banner

Related Stories

Related Stories