தமிழ்நாடு

கலாஷேத்ரா:“அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால் Mark குறைப்பேன்” -வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது ரஷ்ய மாணவி புகார்

கலாஷேத்ரா கல்லூரியில் மூத்த ஆசிரியர் ஒருவர் அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால் Mark குறைப்பதாக மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மாணவி பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கலாஷேத்ரா:“அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால் Mark குறைப்பேன்” -வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது ரஷ்ய மாணவி புகார்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. மாணவிகள் இதுபோன்ற புகாரை பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அண்மையில் இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சனும் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மாணவர்களும் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட பேராசிரியர்களை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் இறங்கினர்.

கலாஷேத்ரா:“அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால் Mark குறைப்பேன்” -வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது ரஷ்ய மாணவி புகார்

இந்த விவகாரம் பெரிய அளவில் தீவிரமாகவே இதற்கு மகளிர் ஆணைய தலைவி குமாரி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தலைமையிலான குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், அங்கு படித்த கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பாலியல் புகார் கொடுத்தார். அதன்பேரில் தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை அண்மையில் அதிரடியாக தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதெல்லாம் ஒரு புறம் இருக்க, பிரபல நடிகை அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் கலாஷேத்ரா பேராசிரியல் ஹரி பத்மனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். ஹரி பத்மனே உண்மையை ஒப்புக்கொண்ட பிறகும், அவர் மீது பொய்யான புகார் வந்ததாக ஆதரவு தெரிவித்து வருபவர்களையும் நெட்டிசன்கள் வெறுத்தெடுத்து வருகின்றனர்.

கலாஷேத்ரா:“அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால் Mark குறைப்பேன்” -வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது ரஷ்ய மாணவி புகார்

தொடர்ந்து இந்த பாலியல் பெரிதளவு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டு கலாச்சாரம் வளர்க்க உருவாக்கப்பட்ட இந்த கல்லூரியில் தற்போது கேரளாவை சேர்ந்த மாணவிகளே அதிகம் பயில்வதாகவும், இந்த கல்லூரி சார்பாக மாணவிகள் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் கூட அங்கே உள்ள வி.ஐ.பி-களிடம் நெருக்கமாக இருக்கும்படி மாணவிகளை சில ஆசிரியர்கள் வற்புறுத்தியதாகவும் செய்திகள் வெளியிட்டது.

இப்படி அந்த நடன கல்லூரியில் குற்றச்சாட்டுகள் சூடு பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு ஆசிரியர் மீது இங்கு பயின்ற ரஷ்யா நாட்டை சேர்ந்த முன்னாள் மாணவி இ-மெயில் மூலம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கலாஷேத்ரா:“அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால் Mark குறைப்பேன்” -வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது ரஷ்ய மாணவி புகார்

அந்த புகாரில், "நாட்டியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் கலாஷேத்ரா கல்லூரியில் விடுதியில் தங்கி படித்தேன். அங்கு சேர்ந்த 6 மாதங்களிலே ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதற்கு நான் இணங்கவில்லை என்பதால், என்னை அவர் மிரட்ட தொடங்கினார். எனது மார்க்கில் கைவைப்பதாக மிரட்டினார். அதோடு எனக்கு ஒப்பனைகள் சரியாக இல்லை என்று சிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி இரவு நேரத்தில் அவரது வீட்டுக்கும் அழைத்தார்.

கலாஷேத்ரா:“அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால் Mark குறைப்பேன்” -வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது ரஷ்ய மாணவி புகார்

விடுதியும், ஆசிரியர்களின் வீடும் அருகில் இருப்பதால், நானும் அந்த ஆசிரியர் வீட்டுக்கு சென்றேன். ஆனால் அங்கே என்னை தொட்டு தொட்டு, என் விருப்பத்துக்கு மாறாக என்னை வன்கொடுமையும் செய்தார். இதனை நான் வெளியே சொன்னால் ஒழுக்கமற்ற நிலையில் வகுப்பில் நடந்து கொள்வதாக கூறி கல்லூரியில் இருந்து என்னை வெளியே அனுப்பிவிடுவதாக மிரட்டினார். இப்படி மிரட்டி என்னை பலமுறை வன்கொடுமை செய்துள்ளார்.

இப்போது நான் இதை சொல்ல காரணம், பேராசிரியர் ஹரி பத்மன் மீது நடவடிக்கை எடுத்ததாக எனது தோழிகள் மூலமாக தெரிந்துகொண்டேன். எனவே அந்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பதற்காகவே புகார் அளிக்கிறேன். இதற்கான ஆதாரங்களை விசாரணையின்போது அளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories