தமிழ்நாடு

“அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பள்ளிக்கல்வித்துறை..” : IITM திட்டத்தால் No.1 மாநிலமாக மாறும் தமிழ்நாடு !

“அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பள்ளிக்கல்வித்துறை..” : IITM திட்டத்தால் No.1 மாநிலமாக மாறும் தமிழ்நாடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாட்டை நம்பன் ஒன் மாநிலமாக மாற்றும் களத்தில் இறங்கியிருக்கின்றது தமிழ்நாடு அரசு. அனைத்துக் குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருவது பெருமைக்குரிய தருணமாக அமைந்துள்ள சூழலில், அரசு பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்கு எடுத்துள்ளது ஐஐடியின் அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற கோட்பாடு. இது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

ஒரு மாநிலம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, மருத்துவம் இரண்டிற்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம். அந்த வகையில் கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக பார்த்து வரும் திராவிட மாடல் அரசு கல்விக்கு ஒருபடி கூடுதலாக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்காத துறை இல்லை என்ற நிலையை நோக்கி நகர்கிறது திராவிட மாடல் அரசு.

“அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பள்ளிக்கல்வித்துறை..” : IITM திட்டத்தால் No.1 மாநிலமாக மாறும் தமிழ்நாடு !

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடிக் கல்வி”, "நம் பள்ளி நம் பெருமை", ‘நான் முதல்வன்’ என்கிற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டம் என பல்வேறு கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

“அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பள்ளிக்கல்வித்துறை..” : IITM திட்டத்தால் No.1 மாநிலமாக மாறும் தமிழ்நாடு !

அதன் ஒரு பகுதியாக ஐஐடி-யுடன் இணைந்து அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முறையாக ஸ்டெம் பயிற்சி அளித்து ஊக்குவிப்பதே இதன் நோக்கம் . அனைவருக்கும் IITM திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி வளாகத்தில் ஆறு கட்டங்களாக 250 பள்ளிகளைச் சேர்ந்த 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

9,10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை திரட்டி அவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பற்றிய செயல்விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளித்து எதிர்காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதிப்பதே இதன் இலக்கு.

“அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பள்ளிக்கல்வித்துறை..” : IITM திட்டத்தால் No.1 மாநிலமாக மாறும் தமிழ்நாடு !

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐஐடி, சென்னையால் வழங்கப்படும் நான்காண்டுப் படிப்பான B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் கடந்த கல்வியாண்டில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது பெருமைக்குரிய தருணமாக அமைந்துள்ளது. சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 இலட்சம் மாணவர்கள் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

“அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பள்ளிக்கல்வித்துறை..” : IITM திட்டத்தால் No.1 மாநிலமாக மாறும் தமிழ்நாடு !

இதுதொடர்பாக அரசு பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் செய்முறை குறித்த பயிற்சி அளிக்கவுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் சென்னை-ஐஐடி-க்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் இடையே தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், 250 அரசுப் பள்ளிகளின் 1 இலட்சம் மாணவர்கள் மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

இம்மாதிரியான திட்டங்கள் எதிர்காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கான வரப்பிரசாதம் என்றார். முதலமைச்சரின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்பான அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டம் ஒட்டுமொத்த அரசு பள்ளிகளிடையே வரவேற்பை பெற்றதோடு, வியக்க வைத்துள்ளது. அனைவர்க்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி பள்ளிக் கல்வித் துறையில் மாபெரும் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டுள்ளது என்றால் அது மிகையல்ல!

banner

Related Stories

Related Stories