தமிழ்நாடு

கண் இமைக்கும் நேரத்தில் ரயில் முன்பு பாய்ந்து மாணவி தற்கொலை : ஒன்றிய அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவி நிஷா (18) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் ரயில் முன்பு பாய்ந்து மாணவி தற்கொலை : ஒன்றிய அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது.

குறிப்பாக, தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வால் மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

கண் இமைக்கும் நேரத்தில் ரயில் முன்பு பாய்ந்து மாணவி தற்கொலை : ஒன்றிய அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!

பின்னர் ‘நீட்’ தேர்வினால், சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெற முடியவில்லை என்பதைப் புள்ளி விபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அதன்பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும் இதுவரை ஒன்றிய பா.ஜ.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்விளைவாக, மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி, சேலம் தனுஷ், கோவை சுபஸ்ரீ உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் ரயில் முன்பு பாய்ந்து மாணவி தற்கொலை : ஒன்றிய அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் உத்திராபதி. என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியான இவர் தனது வேலைக்காக நெய்வேலி 9-வது வட்டத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

இவரது மகள் நிஷா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 399 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். கூடுதலாக பயிற்சி பெறவேண்டும் என்பதற்காக நெய்வேலி இந்திராநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நிஷா முழு நேர பயிற்சி பெற்று வந்துள்ளார் .

இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் உள்ளவர்களிடம் பயிற்சி மையம் சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே கிளம்பியுள்ளார். அவர் ரயில் தண்டவாளம் நோக்கில் நடத்துச் சென்றுள்ளதை பார்த்த அக்கம்பக்கத்தினர், விசாரிப்பதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கண் இமைக்கும் நேரத்தில் ரயில் முன்பு பாய்ந்து மாணவி தற்கொலை : ஒன்றிய அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!

ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே நிஷா உயிரிழந்தார். பின்னர் ரயில் டிரைவர் சொன்ன ரயில்வே போலிஸாருக்கு தகவல் தெரிவித்தார், நிஷாவின் உடலை பார்த்து குடும்பத்தினர் மட்டும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்தோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில், ‘நீட்’ பயிற்சி மையத்தில் நடந்த மாதிரி தேர்வில் நிஷா குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. ஏற்கனவே தன்னை கஷ்டப்பட்டு பெற்றோர் படிக்க வைத்து வந்ததாலும், ‘நீட்’ மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும் மிகுந்த மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories