இந்தியா

“தண்டவாளத்தில் விழுந்த ராட்சத மரம்.. தனி ஆளாக போராடி ரயிலை நிறுத்திய மூதாட்டி” : நெகிழச் செய்த மனிதநேயம்!

கர்நாடகாவில் ரயில் விபத்தை தடுக்க உதவிய செய்த மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

“தண்டவாளத்தில் விழுந்த ராட்சத மரம்.. தனி ஆளாக போராடி ரயிலை நிறுத்திய மூதாட்டி” : நெகிழச் செய்த மனிதநேயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சந்திராவதி என்ற முதாட்டியின் பெயர் இன்று சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. ஏதோ ஒரு உதவி என எண்ணாமல், தள்ளாத வயதில் அவர் மேற்கொண்ட முயற்சியால் பெரும் விபத்து தடுக்கப்ப்பட்டுள்ளது. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பச்சநாடியை அடுத்த மந்தாரா ரயில்வே தண்டவாளத்தின் அருகே திடீரென்று சத்தம் கேட்டுள்ளது. அப்போது அவ்வழியாகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சந்திராவதி (70) என்ற மூதாட்டி என்னவென்ற பார்க்கச் சென்றுள்ளார்.

“தண்டவாளத்தில் விழுந்த ராட்சத மரம்.. தனி ஆளாக போராடி ரயிலை நிறுத்திய மூதாட்டி” : நெகிழச் செய்த மனிதநேயம்!

அப்போது தண்டவாளத்தில் மிகப்பெரிய ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. மேலும் தினசரி ரயில் செல்லும் நேரம் தெரிவதால் அடுத்து சில மணிநேரங்களில் ரயில் வந்துவிடும் என்பதை உணர்ந்த சந்திராவதி முதலில் என்ன செய்வது என்று திகைத்து போனார். பின்னர் மரம் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் செல்ல செல்ல முடியாத நிலையை அறிந்த சந்திராவதி, சிவப்பு நிறத்தை காண்பித்தால் மட்டுமே ரெயிலை நிறுத்த முடியும் என்று நினைத்தார்.

அதன்படி வேகவேகமாக வீட்டிற்கு சென்ற சந்திராவதி, ஒரு சிவப்பு நிற ஆடையை எடுத்து வந்து, ரயில் தண்டவாளத்தில் நின்றார். அவர் வந்த அடுத்த சில நிமிடங்களில்யேயே தூரத்தில் ரயில் சத்தம் கேட்டுள்ளது. பின்னர் அவர் ரயில் பைலட் பார்க்கும்படி அந்த சிவப்பு ஆடையை அசைத்துள்ளார். சிவ ஆடை அசைவதைப் பார்த்த அந்த ரயில் பைலட் விபத்து ஏற்பட இருப்பதை ரயில்வே பைலட் அறித்தார். பின்னர் உடனே பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தினார்.

“தண்டவாளத்தில் விழுந்த ராட்சத மரம்.. தனி ஆளாக போராடி ரயிலை நிறுத்திய மூதாட்டி” : நெகிழச் செய்த மனிதநேயம்!

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மரம் முறிந்து விழுந்தது குறித்து ரயில் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ரயில்வே ஊழியர்களை கொண்டு அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டுசென்றது.

மூதாட்டியின் இந்த சமூகப்பணியை பார்த்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் பயணிகள் அவரை பாராட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதனால் சமூக வலைத்தளத்திலும் மூதாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories