தமிழ்நாடு

திருப்பூர் : போதையில் திரையரங்குக்கு வந்த இளைஞர்கள்.. அனுமதி மறுக்கப்பட்டதால் தகராறு - நடந்தது என்ன?

திருப்பூர் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மது போதையில் திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : போதையில் திரையரங்குக்கு வந்த இளைஞர்கள்.. அனுமதி மறுக்கப்பட்டதால் தகராறு - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருப்பூர் யூனியன் மில் சாலையில் 8 ஸ்கிரீன் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நேற்று மதியம் சிம்பு நடிப்பில் வெளியான பத்துதல திரைப்படத்தை பார்க்க இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

இதன் காரணமாக திரையரங்க விதிமுறைகளின் படி மது போதையில் இருப்பவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திரையரங்க ஊழியர்கள் கூறியுள்ளனர். இதையும் மீறி இளைஞர்கள் தங்கள் கட்டிய பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் : போதையில் திரையரங்குக்கு வந்த இளைஞர்கள்.. அனுமதி மறுக்கப்பட்டதால் தகராறு - நடந்தது என்ன?

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திரையரங்கு ஊழியர்கள் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாக அவரது நண்பர்கள் தொடர்ந்து திரையரங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் இரு தரப்பினரையும் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : போதையில் திரையரங்குக்கு வந்த இளைஞர்கள்.. அனுமதி மறுக்கப்பட்டதால் தகராறு - நடந்தது என்ன?

ஏற்கனவே சென்னையில் பத்துதல திரைப்படத்துக்குள் குறிப்பிட்ட சமூக மக்களை அனுமதித்த சம்பவமும், அதே சென்னையில் விடுதலை படத்துக்கு குழந்தைகளை அழைத்து சென்ற விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருப்பூரில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories