தமிழ்நாடு

“போக்குவரத்துத் துறையில் தனியார்மயமா ?” - அதிமுக MLA கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நச் பதில் !

போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.

“போக்குவரத்துத் துறையில் தனியார்மயமா ?” - அதிமுக MLA கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நச் பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ., அருண்குமார் போக்குவரத்துறை சார்ந்து சில கேள்விகளை கேட்டார். அதற்கு அமைச்சர் அசராமல் பதிலுரை ஆற்றினார். அது பின்வருமாறு :

“போக்குவரத்துத் துறையில் தனியார்மயமா ?” - அதிமுக MLA கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நச் பதில் !

* போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது.

* அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுமே தவிர, தனியாருக்கு வழித்தடம் தரப்படவில்லை.

* உள்ளூர், நகர, கிராம பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 1.70 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள்.

* தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தினை நாட்டின் முதலாவது இடத்திற்கு கொண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது.

* கட்டணமில்லா பேருந்து மூலம் பெண் பயணிகள் ரூ.888 சேமித்துள்ளனர் என போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது.

“போக்குவரத்துத் துறையில் தனியார்மயமா ?” - அதிமுக MLA கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நச் பதில் !

* மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

* மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தாழ்தள சிறப்பு பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* மின்சார செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்து கழக வாகனங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகள் பயணம் மேற்கொள்வதன் எண்ணிக்கை 64.65%ஆக உயர்ந்துள்ளது.

* திருநங்கைகள் 14.66 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 1.93 கோடி, மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 10.2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் - என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories