தமிழ்நாடு

யார் யாருக்கு மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்? : சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்ன பட்டியல் !

‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யார் யாருக்கு மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்? : சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்ன பட்டியல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகளிர் உரிமைத் தொகை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் ஜி.கே. மணி, மகளிர் உரிமைத் தொகை பற்றிப் பேசுகிறபோது, மனந்திறந்துப் பாராட்டினார். ஆனால், அதே நேரத்தில், கிடைக்காதவர்களின் நிலை என்ன என்று ஒரு கேள்விக்கணையையும் அவர் தொடுத்து, அந்தப் பிரச்சினையையும் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது இந்த அவையிலே மட்டுமல்ல; வெளியிலேயும், அதிலும் குறிப்பாக, பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், அதையும் தாண்டி, பல சமூகவலைதளங்களிலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் - இதைப்பற்றி விமர்சனங்கள் செய்தும், பாராட்டியும், புகழ்ந்தும் தொடர்ந்து பேசியும், எழுதியும் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஒரு நீண்ட விளக்கத்தை நான் இந்த அவையில் பதிவு செய்வது என் கடமையென கருதுகிறேன்.

யார் யாருக்கு மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்? : சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்ன பட்டியல் !

இந்த ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

யார் யாருக்கு மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்? : சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்ன பட்டியல் !

இதனைச் செய்ய முடியுமா? இதற்கு நிதி இருக்குமா என்றெல்லாம், கேள்விகளை எழுப்பி, எங்கே திராவிட முன்னேற்றக் கழக அரசு இதனைச் செய்துவிடுமோ என்ற தங்கள் அச்சத்தை பல்வேறு வகைகளிலே வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய விதமாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் விளங்கவுள்ள, இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்பதை இந்த மாமன்றத்தில் மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குச் சமூக விடுதலை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் என்றால், பொருளாதாரச் சமத்துவத்தை வழங்குவதுதான் திராவிட மாடல் அரசு என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும், மனிதநேய அடிப்படையிலான பெண் உரிமை காக்கக்கூடிய எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு கைவிட்டுவிடாது என்ற உறுதியை நான் இந்த மாமன்றத்தில் தெரிவித்து அமைகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories