தமிழ்நாடு

“தமிழ்மொழியை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்..” : முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கை?

தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியான தமிழை, ஆங்கிலத்துடன் சேர்த்து, சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ்மொழியை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்..” : முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (25.03.2023) மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்பமை உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டாக்டர் டி.ஒய். சந்திரசூட் அவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மாண்புமிகு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜு அவர்கள் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீதித்துறையின் உள்கட்டமைப்புக்காக தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படும் அரசு, திமுக அரசு. நீதி நிருவாகம், சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாகவும், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யும் வகையிலும், நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற உட்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கு முன்னுரிமை அளித்து, செயல்பட்டு வருகிறது.

“தமிழ்மொழியை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்..” : முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கை?

➢ இந்த அரசு பதவியேற்ற 2021 மே மாதம் முதல், இன்றுவரையில், புதிய நீதிமன்றங்களை அமைக்க தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி 106 கோடியே 77 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

➢ சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக, 315 கோடி ரூபாய் செலவில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

➢ வழக்குரைஞர் நல நிதிக்கு அரசு சார்பில் 8 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதோடு, வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதி 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு செயல்களை செய்து வருகிறோம்.” எனத் தெரிவித்தார்.

மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார். அந்த கோரிக்கை பின்வருமாறு :-

“தமிழ்மொழியை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்..” : முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கை?

1. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கருத்தில் கொள்ளப்படவேண்டும். நாட்டின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்படும்போதுதான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங்களும், உணர்வுகளும் பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும். அந்த அடிப்படையில், உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும். எனவே, நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக் குறிப்பில் அதற்கேற்ப உரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

2. அடுத்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றொரு கோரிக்கையான உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழி குறித்ததாகும். சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ்மொழியில் தரமான சட்ட நூல்கள், தமிழ்மொழிக்கேற்ப சட்ட தொழில்நுட்பங்களை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்குப் புரியவைப்பது நீதி வழங்கல் அமைப்பின் இன்றியமையாத கடமை என்பதால், அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியான தமிழை, ஆங்கிலத்துடன் சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

3. அடுத்து, உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைவதும் தற்போது முக்கிய தேவையாகும். நாடு முழுவதும் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இருப்பினும், உச்சநீதிமன்றத்தில் செய்யப்படும் மேல் முறையீடுகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. பாராளுமன்ற நிலைக்குழுக்களும்.

சட்ட ஆணையங்களும் உச்சநீதிமன்ற கிளைகளை மாநிலங்களில் அமைத்திட பல்வேறு பரிந்துரைகளை ஏற்கனவே செய்துள்ளன. குறைந்தபட்சம் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களிலாவது உச்சநீதிமன்றத்தின் கிளைகளை நிறுவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories