தமிழ்நாடு

திருடுபோன ஆஞ்சநேயர் சிலை 11 ஆண்டுக்கு பிறகு மீட்பு.. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி!

அரியலூரில் 11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

திருடுபோன ஆஞ்சநேயர் சிலை 11 ஆண்டுக்கு பிறகு மீட்பு.. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் அருள்மிகு வரதராஜ பெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக செந்துறை காவல் நிலையத்தில் 2012ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை முடிவில் சிலைகள் கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு இவ்வழக்கின் விசாரணை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிலைத்திருட்டு தடுப்பு பிரிவு போலிஸார் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தின் வலைதளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு சிலைகளோடு, இந்த கோயில் 4 சிலைகளை ஒப்பீடு பார்க்கப்பட்டது.

திருடுபோன ஆஞ்சநேயர் சிலை 11 ஆண்டுக்கு பிறகு மீட்பு.. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி!

இந்த சிலையில் ஒன்றான ஆஞ்சநேயர் சிலையானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்ததும், மேலும் அச்சிலை ஏலம் விடப்பட்டதும் தெரியவந்தது.

மேற்படி ஆஞ்சநேயர் சிலையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த சிலையை மீட்பதற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மூலமாக, தமிழ்நாடு அரசின் உள்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

பிறகுசிலை கடத்தல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் காரணமாக மேற்படி ஆஞ்சநேயர் சிலையினை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்த அந்த தனிநபர் அந்த ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூலமாக இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

திருடுபோன ஆஞ்சநேயர் சிலை 11 ஆண்டுக்கு பிறகு மீட்பு.. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி!

பின்னர் ஆஞ்சநேயர் அமெரிக்காவில் இருந்து இந்தியத் தொல்லியல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியத் தொல்லியல்துறையிடம் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவால் பெறப்பட்ட ஆஞ்சநேயர் சிலை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த வழக்கில்11 ஆண்டுகளுக்குப் பிறகு திருடுபோன ஆஞ்சநேயர் உலோக சிலையை மீட்டெடுத்து வருவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் மற்றும் அவரது குழுவினருக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories