தமிழ்நாடு

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி.. அசத்தும் வேளாண் நிதிநிலை அறிக்கை: 10 முக்கிய அறிவிப்புகள்!

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி.. அசத்தும் வேளாண் நிதிநிலை அறிக்கை: 10 முக்கிய அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதையடுத்து இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி.. அசத்தும் வேளாண் நிதிநிலை அறிக்கை: 10 முக்கிய அறிவிப்புகள்!

வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு, நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

முந்திரி சாகுபடியைக் கூடுதலாக 550 எக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 எக்டரில் நடவு செய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை.

உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்குத் தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்.

வேளாண்மையின் மகத்துவத்தைப் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்தற்காக கல்வித்துறையுடன் இணைந்து பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1கோடி நிதி ஒதுக்கீடு.

பனை சாகுபடியினை ஊக்குவிக்க, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் வாடகை மையங்கள் உள்ளிட்டவைக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி.. அசத்தும் வேளாண் நிதிநிலை அறிக்கை: 10 முக்கிய அறிவிப்புகள்!

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவேரி வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை, முருங்கை உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக உளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 - 3 மற்றும் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம். பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில் நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வேளாண் விஞ்ஞானிகள் நியமிக்கப்படும்.

உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS இணையதளம் அறிமுகம். விவசாயிகளுக்குச் சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க Whatsapp குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories