தமிழ்நாடு

“கோயிலுக்கு கூழ் ஊத்துறோம் Donation எடு” -திரைப்பட பாணியில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது

சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் வந்த சொகுசு கார்களும் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

“கோயிலுக்கு கூழ் ஊத்துறோம் Donation எடு” -திரைப்பட பாணியில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் தனியார் கிரஷர் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக நவீன் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை நேரத்தில்இடைச்சிவிளை ஆனந்தவிளையைச் சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி செயலாளரார் பூபதிபாண்டியன், திருச்செந்தூர் சரண் (எ) ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் இந்த நிறுவனத்திற்கு காரில் வந்துள்ளனர்.

“கோயிலுக்கு கூழ் ஊத்துறோம் Donation எடு” -திரைப்பட பாணியில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது

அங்கு வந்த அவர்கள் அந்த நிறுவனத்தில் மேலாளர் நவீன் குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது மேலாளர் நவீன் குமார், பூபதிபாண்டியிடம் தங்களது நிறுவன உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், நிறுவன உரிமையாளர் வந்த பின்னர் அவரிடம் நன்கொடை வாங்கி செல்லுமாறும் கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அவர்கள் இருவரும் நன்கொடை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அப்போதும் நிறுவன உரிமையாளரிடம் வாங்கிக்கொள்ளுமாறு நவீன் கூறியிருக்கிறார்.

“கோயிலுக்கு கூழ் ஊத்துறோம் Donation எடு” -திரைப்பட பாணியில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது

இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள் பூபதிபாண்டியன், ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் அந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் தாங்கள் வந்த சொகுசு 2 கார்களை நிறுத்தி ரகளை செய்ய தொடங்கினர். அதோடு அங்கு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

“கோயிலுக்கு கூழ் ஊத்துறோம் Donation எடு” -திரைப்பட பாணியில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது

மேலும் அங்கு பணியில் இருந்த மேலாளர் நவீன்குமார் என்பவரை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தான்குளம் போலிஸ் அதிகாரிகள், 506/1, 341, 294/B, ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிரஷரின் முன்பு அடாவடி செய்த பூபதிபாண்டியன, ஜெய ஆனந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதோடு அந்த நிறுவனத்தின் முன் நிறுத்திவைக்கப்பட்ட அவர்களது 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

“கோயிலுக்கு கூழ் ஊத்துறோம் Donation எடு” -திரைப்பட பாணியில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது

சாத்தான்குளம் அருகே தனியார் கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு தராததால் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில இளைஞர் அணிசெயலாளர் உள்ளிட்ட இருவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு அவர்களை போலிசார் கைது செய்ததோடு அவர்களது இரு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் , பாஜக நகர செயலாளர் அறிவழகன்
திருக்கோவிலூர் , பாஜக நகர செயலாளர் அறிவழகன்

இது போன்று பாஜகவினர் அடிக்கடி அராஜக செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவதே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அண்மையில் கூட திருக்கோவிலூர் பகுதியில் குடிப்பதற்காக தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக நகர செயலாளர் அறிவழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories