தமிழ்நாடு

50 ஆயிரம் மாணவர்கள் 12ம் வகுப்புத் தேர்வு எழுத வராதது ஏன்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!

11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் மாணவர்கள் 
12ம் வகுப்புத் தேர்வு எழுத வராதது ஏன்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

12ம் வகுப்பு பொழித் தேர்வை சுமார் 50,000 மாணவர்கள் எழுதாதது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "12ம் வகுப்பு பொதுத் தேர்வை 5.6% மாணவர்கள் எழுத வில்லை. 38,000 அரசுப் பள்ளி மாணாக்கர்களும்,8000 அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களும், 1000க்கும் மேற்பட்ட தனியார்ப் பள்ளி மாணாக்கர்களும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவில்லை.

50 ஆயிரம் மாணவர்கள் 
12ம் வகுப்புத் தேர்வு எழுத வராதது ஏன்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!

மொழித்தேர்வு நிறைவு பெற்ற பிறகு அன்றைய தினமே தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க அறிவுறுத்தி உள்ளோம். மொழி தேர்வு எழுதா விட்டாலும் மாணவர்களைமற்ற தேர்வுகள் எழுதவைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. உள்ளோம்.

மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பள்ளிகளுக்குச் சரியா வராத மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. 2, 3 நாட்கள் பள்ளிக்கு வந்தவர்களுக்குக் கூட ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்கக் கல்வித் துறைச் செயலரின் மூலமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50 ஆயிரம் மாணவர்கள் 
12ம் வகுப்புத் தேர்வு எழுத வராதது ஏன்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!

பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களைக் கேட்ட பொழுது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான காரணங்கள் சொல்லப்பட்டது. அதில் குறிப்பாக இடம்பெயர்தல் மாணவர்கள் கூலி வேலைக்கு செல்லுதல் கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதார ரீதியாக மீண்டுவராதது, 10ம் வகுப்பில் ஆல் பாஸ் போடப்பட்டதுபோல் 12ம் வகுப்பிலும் ஆல் பாஸ் வழங்கப்படும் என்ற மனநிலை, 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அச்சம் உள்ளிட்ட காரணங்கள் உள்ளது.

மாணவர்களைத் தேர்வு எழுத வைக்கப் பெற்றோர்கள் கல்வித் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் மாணவர்கள் கண்டிப்பாகத் தேர்வை எழுதுவார்கள். தேர்வை எழுத தவறிய மாணவர்களை ஜூன் மாதம் நடைபெறும் துணைத் தேர்வை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை. தொடர்ந்து 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories