தமிழ்நாடு

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர் ஆவேச பேச்சு !

“கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும், ஆடைகளை உற்பத்தி செய்கின்ற நெசவாளத் தோழர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாகக் கருதுகிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெசவாளர்களுக்கு வாழ்வில் விளக்கேற்றிய நெசவாளர்களின் நண்பன் திராவிட நாயகனுக்கு தமிழ்நாடு விசைத்தறி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்கினார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உங்களுக்கு நன்றி அறிவிப்புப் பாராட்டு விழா நடத்த இருக்கிறார்கள், அதற்கு நீங்கள் தேதி தர வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்ட போது, 'எதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்?' என்று நான் கேட்டேன்.

'விசைத்தறிக்கு மின்கட்டணச் சலுகை வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறார்கள்' என்று அவர் சொன்னார். 'இதில் நன்றி தெரிவிப்பதற்கு என்ன இருக்கிறது? நான் என் கடமையைத் தானே செய்தேன்' என்று அவரிடம் சொன்னேன்.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும், ஆடைகளை உற்பத்தி செய்கின்ற நெசவாளத் தோழர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாகக் கருதுகிறேன். இன்றைக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலம் முதல் நெசவாளர் துயர் துடைக்க எப்போதும் தயாராக இருக்கின்ற கழகம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

அந்தக் காலக்கட்டத்தில் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். கைத்தறி ஆடைகள் விற்காமல் தேங்கி இருந்தது. அவர்களது துயர் துடைப்பதற்காக 4.1.1953 ஆம் நாளை கைத்தறி ஆதரவு நாள் என்று கொண்டாடியது திமுகழகம்.

கைத்தறி நெசவாளர் துயர் துடைப்பதற்காக அவர்களிடம் துணியைப் பெற்று - தோளில் தூக்கிச் சென்று தெருத்தெருவாக விற்றுக் கொடுத்த இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

கைத்தறித் துணிகளை வாங்க வேண்டும், கைத்தறித் துணிகளை அனைவரும் அணிய வேண்டும், என்பதை இயக்கமாகவே ஆக்கிய இயக்கம் கழகம். திருச்சி வீதிகளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கைத்தறி ஆடைகளைச் சுமந்து விற்றுக் கொடுத்தார். தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை வீதிகளில் விற்பனை செய்தார்.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

கலைஞர் அவர்கள் மட்டும் இருபதாயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொடுத்தார்கள். ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 1950களில் ஒரு லட்சம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை என்பது மூத்த தோழர்களுக்குத் தெரியும். 10 கிராம் தங்கம் 99 ரூபாய் என்று இருந்த காலம் அது. 'செந்தமிழ்நாட்டுக் கைத்தறி நெசவுச் சேலைகள், வேட்டிகளை வாங்குவீர்!

நம் திராவிட நாட்டினர் சேமம் வேண்டி சிங்கார ஆடைகள் வாங்குவீர்" - என்ற உடுமலை நாராயணகவியின் பாட்டை பாடிக் கொண்டே விற்றுக் கொடுத்தார்கள். கழகத்தவர்கள் அனைவரும் கைத்தறித் துணிகள் தான் அணிய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. கழகத்தின் இருவண்ணக் கொடி போட்ட வேட்டிகளும் சேலைகளும் அதன்பிறகு அதிகமாக தயார் ஆனது. தஞ்சையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி வழங்க கழகம் முடிவெடுத்தபோது -

தலைவர் கலைஞர் அவரகள் கைத்தறித் துணிகளை வாங்கித்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகள் நடந்தது. பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கும் துணி விற்பனையானது. பாதிக்கப்பட்ட பொது மக்களும் துணிகளைப் பெற்றார்கள். அப்படி ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகள் செய்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி என்னிடம் தேதி கேட்டபோது, என்னுடைய கடமையைத் தான் நான் செய்திருக்கிறேன் என்று சொன்னேன்.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

கழகம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நெசவாளத் தோழர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

* காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சரிகை நிறுவனம் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

* ஈரோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலை 1973-ல் துவக்கப்பட்டது.

* கூட்டுறவு கைத்தறி நெசவாளர்களுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் 1975 முதல் செயல்படுத்தப்பட்டது.

* நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. மாதம் தோறும் ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 26 ஆயிரத்து 434 நெசவாளர்கள் இதனைப் பெறுகிறார்கள்.

* 20 விழுக்காடு தள்ளுபடி 1998 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

* விவசாயிகளுக்கு இருப்பதைப் போல கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 2006 ஆம் ஆண்டு கழக அரசால் கொண்டு வரப்பட்டது.

*நெசவாளர்கள் "ஹட்கோ" நிறுவனத்திடம் பெற்ற வீட்டுக் கடன் தொகை அனைத்தையும் 2008 ஆம் ஆண்டில் கழக அரசு தள்ளுபடி செய்தது.

இந்த வரிசையில் இப்போது அமைந்துள்ள திராவிட மாடல் அரசானது பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு தொழில்கள் நசிந்ததைப் போலவே நெசவுத் தொழிலும் நசிவு அடைந்தது. அடுத்து நூல் விலை உயர்ந்தது. இந்த இரண்டு தாக்குதலில் நெசவாளர்கள் சிக்கி இருந்த நேரத்தில் கழக அரசு ஆட்சிக்கு வந்தது.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

அவர்களுக்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டிக் கொடுத்து இந்த தொழிலில் மலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். நெசவாளர் யாரும் கோரிக்கை வைக்காமல் ஏராளமான திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.

* துணிநூல் துறைக்காக தனியாக ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா புத்துயிர் பெற்றுள்ளது.

* நெசவாளர் குறை தீர்க்கும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

* நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 24, 684 பயனாளிகளுக்கு ரூ.120.80 கோடி முத்ரா கடன்கள் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது.

* தஞ்சாவூர். கரூர். விருதுநகர். ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் பயனடையும் வகையில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நெசவுக் கூடம்,பொது வசதி மையம், சாயச்சாலைகள் திறந்து வைக்கப்பட்டது.

* 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணிபுரிந்து வந்த 406 தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

* முதன்முறையாக எப்போதும் இல்லாத வகையில், அடிப்படை கூலியில் 10% அகவிலைப்படியில் 10% உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 1 இலட்சம் நெசாளர்கள் பயனடைந்துள்ளனர்.

*நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1033 நிரந்தரப் பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

* சிறந்த நெசவாளர் விருதுகள். சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

*கைத்தறி ஆதரவு திட்டத்தின்கீழ். 12.866 கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட ரூபாய் 60 கோடி செலவில் தறி உபகரணங்கள். உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

* 757 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெறும் காசுக்கடன் மீதான வட்டி

சுமையை குறைக்கும் வகையில் ரூபாய் 25 கோடி வட்டி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் முதன்முறையாக ரூபாய் 30 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் International Standard Design and Incubation Centre (DICC) அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

* சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் Handlooms and Handicrafts Museum அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

* தமிழ்நாட்டின் கைத்தறி இரகங்களை அடுத்த தலைமுறையினருக்கு (Next Generation) கொண்டு செல்லும் வகையில் Digitization செய்து, ஆவணப்படுத்தும் பணிகள் ரூபாய் ஒரு கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

* ஈரோட்டிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையிலுள்ள தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது

* 5,000 விசைத்தறிகளின் உற்பத்தி மற்றும் தரத்தினை மேம்படுத்த, ரூபாய் 12 கோடி செலவில் Electronic Panel Board நிறுவப்பட்டு வருகிறது.

*வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 1.78 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு. விநியோகம் நடைபெற்று வருகிறது.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

* வேட்டி சேலை திட்டம் மற்றும் சீருடை வழங்கும் திட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி 10% முதல் 30% வரை ரூபாய் 4.40 கோடி அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

* பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ். 42 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு சீருடைத் துணிகள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ளது.

* கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூ.4.00 இலட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் 20 மாத காலத்தில் செய்து தரப்பட்ட திட்டங்கள் ஆகும்.

துணி நூல் துறை சார்பில் செய்யப்பட்ட திட்டங்கள் போதாது என்று மின்சாரத் துறை அமைச்சரும் தன் பங்குக்கு நெசவாளர்களுக்கு திட்டம் தீட்டி இருக்கிறார். எப்போதும் எதிலும் திட்டமிட்டுச் செயல்படக் கூடியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள். அவரை டார்கெட் அமைச்சர் என்றே நான் சொல்வது உண்டு. தனக்கான டார்க்கெட்டை அவரே உருவாக்கி வைத்துக் கொண்டு - அதனை அவரே செய்து காட்டுவார். அது கட்சிக்காக இருந்தாலும் ஆட்சிக்காக இருந்தாலும் செய்து காட்டுவார்.

ஒன்றரை லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்கியதன் மூலமாக அரசுக்கு மிகப்பெரிய மதிப்பு விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. கடந்த பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு கட்சி ஆண்டது. பத்து ஆண்டு காலத்தில் மொத்தமே 2.20 லட்சம் விவசாய மின் இணைப்புகள் மட்டும் தான் வழங்கப்பட்டன .

ஆனால் நாம் இருபது மாத காலத்தில் 1.50 லட்சம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம். சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் - இது கலைஞரின் முழக்கம்! சொல்லாததையும் செய்வோம்சொல்லாமலும் செய்வோம் - இது எனது முழக்கம். அந்த வரிசையில் தான் சொல்லாமல் செய்து காட்டி இருக்கிறோம். அந்த வகையில் தான் கைத்தறிக்கும் விசைத்தறிக்கு மின் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

.இரு மாதத்திற்கு ஒரு முறை கைத்தறி நெசவாளர்களுக்கு 100 அலகுகள் வரையிலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 அலகுகள் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 2006 ஆம் ஆண்டு தொடங்கியதே கழக அரசு தான்.

அதில் இப்போது மாபெரும் சலுகையை அரசு அறிவித்துள்ளது. விலையில்லா மின்சாரம் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 அலகுகள் என்பது 300 அலகுகளாகவும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 அலகுகள் என்பது 1000 அலகுகளாகவும் 03.03.2023 முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 73,642 கைத்தறி நெசவாளர்களும், 1,68,000 விசைத்தறி நெசவாளர்களும் பயனடையப் போகிறார்கள் இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.53.00 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இதனை செலவாக நாங்கள் நினைக்கவில்லை. இந்த சலுகையை வழங்குவதன் மூலமாக நெசவாளர்கள் புத்துயிர் பெறுவார்கள். அதிகமான உற்பத்திகள் செய்வார்கள்.

அந்த மகிழ்ச்சியைத் தான் உங்களது முகங்களில் நான் காண்கிறேன். தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின் கட்டணம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதன் காரணமாக ஆறு தறிகள் மட்டும் வைத்து ஓட்டக்கூடிய ஏழை எளிய விசைத்தறியாளர்கள் எந்தவித கட்டணம் இன்றி இத்தொழிலை செய்யக்கூடிய ஒரு அரிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

விசைத்தறிகளுக்கான மின் கட்டணம் ரூபாய் 1.40 பைசா என உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை 50% குறைத்து 70 பைசாக்கு மட்டுமே ஒரு யூனிட்டிற்கு என குறைத்து, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கணிசமான தொகை இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிச்சம் ஆகும்.

மேலும் இத்தொழிலை வளர்ச்சி அடைய வைப்பதற்கான பெரும் முயற்சி இனி தமிழக அரசு எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள 24.06 இட்சம் விசைத்தறிகளில், நமது மாநிலத்தில் சுமார் 5.63 இலட்சம் விசைத்தறிகள் இருக்கின்றன. இதில் 10 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் காக்கும் கடமை அரசுக்கு உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் உண்டு.

* விவசாயம்,கைத்தறி போல விசைத்தறிகளுக்கும் அரசின் உதவிகள் வேண்டும் என்கிறீர்கள். விவசாயம், கைத்தறியைப் போல விசைத்தறிகளுக்கும் முக்கியம் கொடுக்க நினைப்பதால் தான் மின் கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

* விசைத்தறிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.

* அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவையான துணிகளை விசைத்தறிகள் மூலமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

ஜவுளி பூங்கா மேற்கு மண்டலத்தில் அமைக்கப்படும். திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரையில் நீங்கள் கோரிக்கை வைக்காமல் நிறைவேற்றித் தரும் அரசு என்பதை மறந்துவிடாதீர்கள். இது எனது அரசு அல்ல, நமது அரசு. உங்களின் அரசு. உங்களுக்கு உழைக்கவே நான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேனே தவிர -வேறல்ல.

இது மக்களுக்கு நன்கு தெரியும். அதன் அடையாளம் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள். விட 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசு கட்சி வேட்பாளரான நம்முடைய இளங்கோவன் அவர்கள் வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பத்தாயிரத்துக்கும் குறைவான வித்தியாசம் தான். இப்போது 66 ஆயிரம் வித்தியாசம்.

இது எதைக் காட்டுகிறது என்றால் மக்களுக்கு இந்த அரசு மீது இருக்கும் மகத்தான நம்பிக்கையைக் காட்டுகிறது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மேற்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியை நாங்கள் பெற முடியவில்லை என்பது உண்மை தான். ஆனால் அந்த நிலைமை மாறிவிட்டது என்பதன். அடையாளம் தான் ஈரோடு மேற்கு தொகுதியில் அடைந்த வெற்றியாகும்.

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

மேற்கு மண்டலத்தில் நாங்கள் செல்வாக்கானவர்கள் என்று மார்தட்டிக் கொண்ட அதிமுக ஆட்சியானது - கடந்த பத்தாண்டு காலத்தில் இந்த மண்டலத்துக்கு என்ன சாதனை செய்து கொடுத்திருக்கிறது என்றால் எதுவும் இல்லை. இதனுடைய தொழில் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. புத்தாக்கத் தொழில்களை உருவாக்க வில்லை. ஆனால் திமுக ஆட்சி ஏராளமான தொழில்களைக் கொண்டு வந்துள்ளது.

பெரிய தொழில்களை மட்டுமல்ல, சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் ஊக்குவித்து இருக்கிறது. இந்த தொழில்களின் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணிபுரியும் வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பார்த்து இந்தியாவின் மற்ற மாநிலத்தில் இருந்தும் தொழிலாளர்கள் இங்கு வேலைகளுக்காக வருகிறார்கள். இப்படி தமிழ்நாடு என்பது தொழில்வளர்ச்சியில் சிறந்த - அமைதியான - அனைவர்க்கும் வாழ்வழிக்கும் மாநிலமாக இருப்பது சிலரது கண்களை பொறுக்கல தலைவர் கலைஞர் கதை வசனம் எழுதிய புதையல் படத்தில் நெசவுத் தொழிலை பாராட்டி ஒரு பாடல் வரும்.

அதனை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள். இந்தப் பாடலை எழுதுவதற்காக ஒரு வார காலம் காஞ்சிபுரத்தில் நெசவாளர் வீட்டில் தங்கி அந்த தொழிலை எப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் அந்தப் பாடலை எழுதியதாகச் சொல்வார்கள்...

“எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர்  ஆவேச பேச்சு !

''சின்ன சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

சித்திரக் கைத்தறிச் சேலையடி

நம்ம தென்னாட்டில் எந்நாளும்

கொண்டாடும் வேலையடி'' - என்று அந்தப் பாட்டு தொடங்கும்.

'' ஒற்றுமையோடு அத்தனை நூலும்

ஒழுங்கா வந்தா வளரும்

ஒற்றுமையோடு அத்தனை நூலும்

ஒழுங்கா வந்தா வளரும்

இதில் ஒரு நூலருந்தால் குளறும்

இதை ஓட்டும் ஏழை கூட்டுறவாலே

உலகில் தொழில் வளம் உயரும்

இந்த உலகில் தொழில் வளம் உயரும்" - என்று பட்டுக்கோட்டையார் எழுதி இருப்பார்.

அப்படி ஒற்றுமையாக மக்கள் அனைவரும் வாழும் மாநிலம் தமிழ்நாடு. அதனைச் சிதைக்கப் பார்க்கிறார்கள். வதந்திகளின் மூலமாக - பொய்களின் மூலமாக - இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அத்தகைய வதந்திகள் - பொய்கள் அனைத்தும் எழுந்த வேகத்தில் அமுக்கப்பட்டு விடுகின்றன. விவசாயிகளுக்கு - நெசவாளர்களுக்கு - இளைஞர்களுக்கு - மாணவர்களுக்கு - பெண்களுக்கு - விளிம்பு நிலை மக்களுக்கு - ஏழை எளிய மக்களுக்கு இந்த ஆட்சி தினந்தோறும் செய்து வரும் நலத் திட்ட உதவிகளில் இருந்து திசை திருப்பி விடச் செய்யும் தந்திரங்கள் தான் இது போன்ற பொய்களும் வதந்திகளும் ஆகும்.

எனது பொதுவாழ்க்கையில் இது போன்ற எத்தனையோ பூச்சாண்டிகளை நான் பார்த்துக்கிறேன். நான் கலைஞரின் மகன். இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டேன். போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் - தொடர்ந்து செல்வேன். மக்கள் சேவை ஆற்றுவேன்.

இத்தகைய எனக்கு உங்களது பாராட்டு என்பது ஊக்கம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. உங்களது பாராட்டுகள் எனக்கு உரம் அளிப்பதாக இருக்கிறது. தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories