தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் பண மோசடி செய்த அ.தி.மு.க கும்பல் - முக்கிய அதிமுக நிர்வாகி கைது !

திருவெறும்பூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் பண மோசடி செய்த அ.தி.மு.க கும்பல் - முக்கிய அதிமுக நிர்வாகி கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சுகாதார துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்றொரு அதிமுக நிர்வாகியை தேடி வருகின்றனர்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத் இவரது மனைவி மார்கரேட் ஜெனிபர். இவர் நர்சிங் முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மார்க்ரேட் ஜெனிபருக்கு அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடம் கூறி மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக நிர்வாகிகளான கிருஷ்ண சமுத்திரத்தை சேர்ந்த லாசர், தேனீர் பட்டியைச் சேர்ந்த வீரமலை, சூரியூரை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர மார்கரேட் ஜெனிபரிடம் ரூபாய் 4 லட்சத்தை பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர்.

அதனால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கும் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் விரத்தி அடைந்த மார்கரேட் ஜெனிபர் இச்சம்பவம் குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாசம் 21வது தேதி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து லாசரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சுப்ரமணியும், வீரமலையும் கைதாகாமல் முன் ஜாமீனுக்கு அப்ளை செய்து வந்த உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் முன்ஜாமினுக்கு உரிய ஜாமின் கொடுக்காததால் அது தள்ளுபடி ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்கெட் ஜெனிபருக்கு பணமும் வந்த பாடில்லை வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் மார்கெட் ஜெனிபர் திருச்சி ஐஜி, டிஐஜி, எஸ் பி மற்றும் திருவெறும்பூர் டி.எஸ்.பி ஆகியோரிடம் புகார்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் திருவெறும்பூர் டிஎஸ்பி உத்தரவின் பேரில் துவாக்குடி போலீசார் நேற்று இரவு தேனீர் பெட்டியை சேர்ந்த வீரமலை தற்பொழுது அதிமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார் அவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories