தமிழ்நாடு

“எடப்பாடி துரோகத்தின் அடையாளம்” : விமான நிலையத்தில் கூச்சலிட்ட இளைஞர்.. வழிமறித்து தாக்கிய அதிமுகவினர்!

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து கோஷம் எழுப்பிய இளைஞரை முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் சூழ்ந்து விமான நிலைய வளாகத்தில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

“எடப்பாடி துரோகத்தின் அடையாளம்” : விமான நிலையத்தில் கூச்சலிட்ட இளைஞர்.. வழிமறித்து தாக்கிய அதிமுகவினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை அருகில் நின்று துரோகி என பேஸ்புக்கில் லைவ் : மற்றொருவர் விமான நிலைய பேருந்தில், பயணம் செய்த நபர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து கோஷம் எழுப்பியதால் முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் சூழ்ந்து விமான நிலைய வளாகத்தில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை நகரில் நடைபெறும் அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அதில் விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வரும் பேருந்தில் ஏறி வருகை தந்தார்.

அப்போது விமான நிலைய ஓடுதள பேருந்தில் அவருடன் பயணித்த சிங்கம்புணரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரது மகன் ராஜேஷ் தனது முகநூல் பக்கத்தில், எடப்பாடி பழனிசாமி தம்முடன் பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்தார். அதில் "திடீரென எதிர்க்கட்சித் தலைவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன் என பேசியவர்.

தொடர்ந்து எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம் என்று ராஜேஷ் கூறியதும் கையை உயர்த்தி காண்பித்து நடிகர் வடிவேலு பாணியில் சைகை செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. "சின்னமாவிற்கு துரோகத்தை பண்ணியவர்., 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் உடன்வந்தவர் அவரது செல்போனை பறித்தார். பின்னர் ராஜேஷை விமான நிலைய போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜேஷ் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சொந்த நாட்டிற்கு வந்ததும் தனது துரோகி என எடப்பாடி அருகில் நின்று லைவ் பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து எடப்பாடி அருகே நின்று கொண்டு சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளது வைரலாகிவருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த இளைஞரை அதிமுகவிரின் சூழ்ந்துக் கொண்டு தாக்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories