தமிழ்நாடு

“ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும் அக்னிபாத் தேர்வு”: ஒன்றிய அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

அக்னி வீரர் ஆட்சேர்ப்பு தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுத்து தேர்வு எழுத வாய்ப்புள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும் அக்னிபாத் தேர்வு”: ஒன்றிய அரசுக்கு வலுக்கும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் தேர்வு முகாம் குறித்த விளக்க கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சென்னை தலைமையிட ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் எம்.கே.பாத்ரே செய்தியாளர்களை சந்தித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு 2023 - 24 ஆண்டிற்கான அக்னி வீர் திட்டத்திற்கு ஆட் சேர்க்கும் பணிக்கான விண்ணப்பங்கள் பதிவு துவங்கியுள்ளது. 17 வயது முதல் 21 வயதுக்குள் உள்ள நபர்கள் இதற்காண இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு உதவ பல்வேறு ஆன்லைன் நடைமுறைகளும் மற்றும் பயிற்சி வீடியோக்களும் இத்தளத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, சென்னை , கடலூர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் வரும் மார்ச் 15 க்குள் ராணுவ ஆட்சேர்ப்பு இணைய தளத்தில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

இதற்காக இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெற உள்ளது. முதற்கட்டம் தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் ஆன எழுத்து தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் தேர்வானவர்கள் உடற் தகுதி தேர்வு மற்றும் விளையாட்டு தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு , 12ஆம் வகுப்பு , ஐடிஐ மட்டும் டிப்ளமோ ஆகியவை கூடுதல் தகுதிகளாகும் இருக்கும். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இடம்பெறும் எனவும் இயக்குனர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் இதில் இணைய விரும்பும் நிலையில் போதிய ஆங்கில அறிவு திறன் இருந்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதும் , பிற மொழியான இந்தியை தற்போது வரை பள்ளி மாணவர்கள் கற்கவில்லை என்பதும் தெரிந்தும் இதுபோன்று இரண்டு மொழியில் மட்டுமே என்பது பெரும் வருத்தமளிக்கிறது.

மேலும் இதுவரை இது போன்ற மாணவர்கள் நேரடியாக கணினி மூலம் தேர்வை எழுதியதும் இல்லை என்பதும் இதனால் தேர்வில் தேர்ச்சி என்பது எவ்வாறு இருக்கும் என்பதை நாமே யூகித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories