தமிழ்நாடு

“மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் என்ற கேடயம் தான் இந்துத்துவாவை எதிர்கொள்ள சரியானது” : வைரமுத்து பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் என்ற கேடயம் தான் இந்துத்துவாவை எதிர்கொள்ள சரியானது என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

“மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் என்ற கேடயம் தான் இந்துத்துவாவை எதிர்கொள்ள சரியானது” : வைரமுத்து பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு "மக்கள் முதல்வரின் மனிதநேயத்திருநாள்" என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் "சான்றோர் அரங்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், கவிப்பேரரசு வைரமுத்து, எழுத்தாளர் சிவசங்கரி, மருத்துவர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் முதலமைச்சரை வாழ்த்தி உரையாற்றினர்.

எழும்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கவிப்பேரரசு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வயது 70 அவரது பொது வாழ்க்கைக்கு வயது 55 என்றும் அவர் உடம்பெல்லாம் அரசியல் என்ற வைரம் பாய்ந்துள்ளது.

70 வயது என்பது முதுமையின் துவக்கம் அல்ல இளமையின் கணிவு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லை விட செயலை தான் விரும்புவார். இன்றைய தேவை, நாளைய தேவை, அடுத்த ஆண்டின் தேவை இவை மூன்றையும் மனதில் வைத்து திட்டமிடும் தலைவன் தோற்க மாட்டான்.

சோறு, அரிசி, விதை நெல் இந்த மூன்றையும் தெளிவாக தெரிந்துகொண்டு தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சி, நாளைய வளர்ச்சி எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஓட்டை பற்றி கவலைக்கொள்ளாமல் தமிழ்நாடின் எதிர்கால தேவைக்காக திட்டங்களை செயல்படுத்துகிறார்.

நான் ஒரு போதும் தனி மனிதனை பகைத்துக்கொள்ள மாட்டேன். தத்துவத்தை தான் எதிர்ப்பேன்.இந்துத்துவா என்ற தத்துவம் நம்மை மிரட்டி வருகிறது. அதனை எதிர்கொள்ள சரியான வால், அம்பு, வேல், தலைவன், அறிவு, யார் என்று பார்த்தால் அது தான் ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் என்ற கேடயம் தான் இந்துத்துவாவை எதிர்கொள்ள சரியானது.

இந்துத்துவாவா? திராவிட மாடலா? மோதி பார்ப்போம் என சவால் விட்டு பேசினார். திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்து மு.க.ஸ்டாலினிடம் இது சாத்தியமா என கேட்டேன். சாத்தியம் என சொன்னார். நான் பயந்துவிட்டேன். ஆனால், இன்று திமுக தேர்தல் வாக்குறுதிகள் 85 % நிறைவேற்றப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மட்டும் இல்லை என்றால் நாம் திணறிப்போய் இருப்போம் என வைரமுத்து பேசினார்.

banner

Related Stories

Related Stories