தமிழ்நாடு

ஒரே ஒரு செங்கல்லை வைத்துவிட்டு தமிழ்நாட்டை கேவலப்படுத்தும் பாஜக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு ஒரு செங்கல்லுக்கு மேல் இன்னொரு செங்கல்லைக் கூட வைக்காமல் தமிழ்நாட்டை கேவலப்படுத்தி கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு செங்கல்லை வைத்துவிட்டு தமிழ்நாட்டை கேவலப்படுத்தும் பாஜக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.

இந்த விழாவில் ஏற்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் ஆகும்.

ஒரே ஒரு செங்கல்லை வைத்துவிட்டு தமிழ்நாட்டை கேவலப்படுத்தும் பாஜக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி - ஒற்றைத் தன்மை எதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும் - அது ஒன்று தான் நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும்.

பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்லி விடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத் தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரசு உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டு காலமாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த ஒற்றுமை ஒன்று தான் அந்த வெற்றிக்கு அடிப்படையாகும். இதனை 2021 ஆம் ஆண்டே சேலம் பொதுக்கூட்டத்தில் அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை வைத்துச் சொன்னேன். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமையுங்கள் என்று சொன்னேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து - விட்டுக் கொடுத்து - பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் - என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது.

ஒரே ஒரு செங்கல்லை வைத்துவிட்டு தமிழ்நாட்டை கேவலப்படுத்தும் பாஜக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு - நான்காண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு - இன்று வரை ஒரு செங்கல்க்கு மேல் இன்னொரு செங்கலைக் கூட வைக்காமல் தமிழ்நாட்டைக் கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு.

மொத்தமே 12 கோடி ரூபாயை மட்டும் தான் மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கி இருப்பதாக இது எட்டுக் கோடித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் காரியம் அல்லவா? எட்டுக் கோடி மக்களின் பிரதிநிதிகளால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அனுமதிக்காமல் ஒரு நியமன ஆளுநர் நாள்களைக் கடத்த முடியுமானால் - இவர்கள் தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாக பணம் ஒதுக்குவாய்... சங்கதமிழுக்கு வெறும் கையை நீட்டுவாய் .... என்றால் அதனால் அவமானப்படுத்தப்படுவது திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாம் அரசியல் கொள்கைகள். ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி அனுப்பினோம். அதனைக் கூட இங்கே ஆளுநராக இருப்பவர் அனுமதிக்கவில்லை. மகாபாரதத்திலேயே சூதாட்டம் இருக்கிறதே என்று நினைத்து தடை செய்ய மறுக்கிறார்களா?" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories