தமிழ்நாடு

“பெண்களுக்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்பு” -ரயில்வே கேட்டில் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

பெண்களால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும் என பாவூர்சத்திரம் ரயில்வே கேட் விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

“பெண்களுக்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்பு” -ரயில்வே கேட்டில் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பிரதான ரயில்வே கேட் பகுதியில் கடந்த 16ஆம் தேதி ரயில்வே பெண் ஊழியர் வித்யா இரவில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதோடு அவரை கடுமையாக தாக்கவும் செய்தார்.

சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக தன்னிடம் அத்துமீறிய அந்த நபரிடம் போராடி வித்யா தப்பித்து வீதிக்கு ஓடி வந்த நிலையில் அதன் பின்பு பொதுமக்களின் உதவியோடு அவர் காப்பாற்றப்பட்டு காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

“பெண்களுக்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்பு” -ரயில்வே கேட்டில் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

பின்னர் சிசிடிவி உதவியோடு வித்யாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் யார் என்று கண்டறியப்பட்டது. அந்த இளைஞர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் அனீஸ் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அவரை காவல்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

“பெண்களுக்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்பு” -ரயில்வே கேட்டில் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர் வித்யா மற்றும் அவரது கணவர் சுகுமாரன் சுந்தர் ஆகியயோர் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வித்யாவின் கணவர் சுகுமாரன் சுந்தர், "எனது மனைவி 15 நிமிடம் நடைபெற்ற போரில் போராடி வெற்றி பெற்றுள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் பாலியல் இச்சைக்கு அணுகவிடாமல் அந்த நபரிடம் எனது மனைவி போராடியுள்ளார்.

எனது மனைவியின் துணிச்சலான போராட்டத்தால் கோபமடைந்த அந்த நபர் அவரை கொலை செய்ய கூட முயற்சித்துள்ளார். சாவின் விளிம்பிற்கே சென்று அவர் பிழைத்துள்ளார். இந்த நிகழ்வு நடைபெற்ற பின்பு ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்புப் பாதை காவல் துறையினர், தமிழ்நாடு காவல்துறையினர் என அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

“பெண்களுக்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்பு” -ரயில்வே கேட்டில் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

கேரள ஊடகங்கள் உட்பட அனைவரும் எனது மனைவி பாதிக்கப்பட்டதை மட்டுமே சொல்கின்றனர். ஆனால் அவர் மிகப்பெரிய போரில் போராடி வீரமாக வெற்றி பெற்றுள்ளார் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். தன்னைத் தவிர வேறு யாரும் தனக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார்.

“பெண்களுக்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்பு” -ரயில்வே கேட்டில் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் வித்யா கூறுகையில், "என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் முழுமையாக தமிழில் மட்டுமே பேசினார். அவன் மேல் சட்டை அணியாமல் காக்கி நிறம் கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு என்னிடம் அத்துமீரர்களில் ஈடுபட்டான். இருப்பினும் என்னால் முடிந்த அளவு அவரிடம் போராடி வெற்றி பெற்றுள்ளேன்.

என்னை பாதிக்கப்பட்ட பெண்ணாகவே ஊடகங்கள் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. அதைவிட ஒரு பெண்ணாக எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; பெண்களின் போராட்டம் குறித்தும் அனைத்து ஊடகங்களும் சொல்ல வேண்டும். என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது.

“பெண்களுக்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்பு” -ரயில்வே கேட்டில் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

ஆனால் கேரள ஊடகங்களும் கூட தமிழ்நாட்டில் கேரள பெண் பாதிக்கப்பட்டு விட்டதாகவே என்னை சித்தரித்தார்கள். ஆனால் தனது போராட்டத்தைப் பற்றியும் தான் போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும் யாரும் குறிப்பிடவில்லை. பெண்கள் சுயமாக அவர்கள் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்; இறுதிவரை போராட வேண்டும்" என்றார்.

இச்சம்பவத்தின் போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அம்மாநில ஊடகங்கள், மாநில வெறுப்பை காட்டும் நிகழ்வாக பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தனர் அதேசமயம் அதே கேரளாவை சேர்ந்த நபர் தான் குற்றவாளி என்பது விசாரணையில் வெட்ட வெளிச்சமானது இதுபோன்ற சூழலில் கேரள ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்து வித்யா தனது வேதனையை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories