தமிழ்நாடு

“ATM பணத்தை பைக்கில் எடுத்து சென்ற ஊழியர்.. நூதன முறையில் ரூ.2.10 லட்சம் கொள்ளை” : சிக்கியது எப்படி ?

திருவள்ளூர் அருகே நூதன முறையில் ஏ.டி.எம். ஊழியரிடம் ரூ.2.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை போலிஸார் கைது செய்தனர்.

“ATM பணத்தை பைக்கில் எடுத்து சென்ற ஊழியர்.. நூதன முறையில் ரூ.2.10 லட்சம் கொள்ளை” : சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் இட்டாச்சி எனப்படும் தனியார் ஏ.டி.எம்-ல் பணம் நிரப்பும் ஊழியராக உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 11-தேதி இந்தியன் வங்கி திருவாலங்காடு கிளையில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரம் பணமாக எடுத்துக் கொண்டு, அதனை திருவாலங்காடு அரக்கோணம் சாலையில் உள்ள இட்டாச்சி ஏ.டி.எம்-ல் பணம் நிரப்ப சென்றுள்ளார்.

ஆனால் 80 ஆயிரம் ரூபாயை மட்டும் நிரப்பிய அவர் அங்கிருந்து மீதமுள்ள 2 லட்சத்து 10 ஆயிரத்தை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 100 ரூபாய் மற்றும் பத்து ரூபாய் நோட்டுகள், ஐ.டி கார்டு கீழே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

“ATM பணத்தை பைக்கில் எடுத்து சென்ற ஊழியர்.. நூதன முறையில் ரூ.2.10 லட்சம் கொள்ளை” : சிக்கியது எப்படி ?

இதனால் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோபி இறங்கி தேடிய போது வாகனத்தில் வைத்திருந்த 2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மர்ம நபர் மின்னல் வேகத்தில் மறைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கோபி இருசக்கர வாகனத்தில் பின்னால் விரட்டி சென்றும் பிடிக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து கோபி திருவாலங்காடு போலிஸில் புகார் செய்தார். போலிஸார் வழக்குப் பதிவு மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், சி.சி.டி.வி கேமராவில் பதிவான கட்சிகளைக் கொண்டு விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த ஓ.ஜி.குப்பம் பகுதியைச் சேர்ந்த அங்கையன் என்கிற சுப்பிரமணியும் அவனது கூட்டாளிகள் என்பதை கண்டுபிடித்து சுப்பிரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories