தமிழ்நாடு

திருவண்ணமலை ATM கொள்ளை.. வட மாநில கும்பலை பிடிக்க விரைந்த தனிப்படை.. IG கண்ணன் முக்கிய தகவல் !

திருவண்ணாமலை அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவம் விவகாரத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணமலை ATM கொள்ளை.. வட மாநில கும்பலை பிடிக்க விரைந்த தனிப்படை.. IG கண்ணன் முக்கிய தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று மர்ம கும்பல் உள்ளே நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உள்ளே நுழைந்த அவர்கள், கேஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு ஏடிஎம்-ல் இருந்த சுமார் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

திருவண்ணமலை ATM கொள்ளை.. வட மாநில கும்பலை பிடிக்க விரைந்த தனிப்படை.. IG கண்ணன் முக்கிய தகவல் !

தொடர்ந்து தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம், போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் என அடுத்தடுத்து மூன்று எஸ்.பி.ஐ ஏடிஎம் மற்றும் ஒன்இந்தியா ஏடிஎம் என 4 ஏடிஎம்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைபோன பணம் சுமார் ரூ.72 லட்சமாகும் என கூறப்படுகிறது.

திருவண்ணமலை ATM கொள்ளை.. வட மாநில கும்பலை பிடிக்க விரைந்த தனிப்படை.. IG கண்ணன் முக்கிய தகவல் !

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவையை ஆய்வு மேற்கொண்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்பத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தலைமையில் மூன்று காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவண்ணமலை ATM கொள்ளை.. வட மாநில கும்பலை பிடிக்க விரைந்த தனிப்படை.. IG கண்ணன் முக்கிய தகவல் !

அப்போது ஆந்திரா, மும்பை, ஒடிசா போன்ற வெளிமாநிலங்களை தொடர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை கையாளக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய வட மாநில கொள்ளை கும்பல் இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட மாடல் ஏடிஎம் எந்திரத்தை மற்றும் ஏடிஎம் ஆதாரங்களை செயல் இழக்க செய்துவிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "வட மாநில கொள்ளை கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக கையாள தெரிந்து வைத்துள்ளவர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஏடிஎம் இயந்திரத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. அதனைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறோம்.

திருவண்ணமலை ATM கொள்ளை.. வட மாநில கும்பலை பிடிக்க விரைந்த தனிப்படை.. IG கண்ணன் முக்கிய தகவல் !

கொள்ளையர்கள் குழுவாக வந்து கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு குறித்து விசாரிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளி மாவட்ட காவல் துறையினரும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவகின்றனர்.

மேலும் ஒரு காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் மற்றொரு தனிப்படைகள் வெளிமாநிலம் சென்றுள்ளது. மொத்தம் 4 ஏடிஎம் மையங்களில் 72 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் இருந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணமலை ATM கொள்ளை.. வட மாநில கும்பலை பிடிக்க விரைந்த தனிப்படை.. IG கண்ணன் முக்கிய தகவல் !

இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாளையம் சுங்கச்சாவடியில்‌ தருமபுரி மாவட்ட காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வழியேகடக்கும், கார்கள், சந்தேகம் ஏற்படு்ம்படி வரக்கூடிய வாகனங்களையும் வாகன ஒட்டுனர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட‌வைகளை சோதனை செய்து தொப்பூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories