தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் காலத்தை Freeze செய்து வைத்துள்ள சென்னை புகைப்படக் கண்காட்சி” - சிறப்புத் தொகுப்பு!

“தமிழ்நாட்டின் காலத்தை Freeze செய்து வைத்துள்ள சென்னை புகைப்படக் கண்காட்சி” - சிறப்புத் தொகுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காலத்தை பிடித்து வைக்க கூடிய திறன் கொண்டது புகைப்படம். அப்படி தமிழ்நாட்டின் காலத்தை Freeze செய்து வைத்துள்ள புகைப்படக்கண்காட்சி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்

புகைப்படம் என்பது எழுத்துகள், வார்த்தைகள், வாக்கியங்கள் இன்றி ஒரு நிகழ்வை கூறுவது. இதற்கு மொழி என்பது கிடையாது. இவ்வாறு மொழியீன்றி பேசும் படங்களின் கண்காட்சி சென்னையில் லலீத்கீதா அகாடமி நடைபெற்றது. புகைப்பட கலைஞர் சங்கத்தின் சார்பில், 5 நாட்களுக்கு நடைபெறும் கண்காட்சியை 10ம் தேதி (நேற்று) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

“தமிழ்நாட்டின் காலத்தை Freeze செய்து வைத்துள்ள சென்னை புகைப்படக் கண்காட்சி” - சிறப்புத் தொகுப்பு!

15 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 50 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தற்போது வரையிலும் எடுத்து பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்பட செய்திகள் இடம் பெற்றுள்ளன. அரசியல் தலைவர்கள் முதல் சாமானியன் வரையிலும், மழை வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சிற்றங்களும், கொரோனா நோய் தொற்று பரவல் போன்ற பல இக்கட்டான சூழல்களின் 200க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் இறுதி ஊர்வலங்கள், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஶ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் தொழிற்சாலையில் கலைஞர் முதல் சன்றோ வாகனத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்த அரிய புகைப்படங்கள், மேலும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு ஹூண்டாயின் முதல் அல்காசார் வாகனத்தை தொடங்கி வைத்தது போன்ற பல கால இடைவெளிகளில் நடந்த நிகழ்வுகளின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

“தமிழ்நாட்டின் காலத்தை Freeze செய்து வைத்துள்ள சென்னை புகைப்படக் கண்காட்சி” - சிறப்புத் தொகுப்பு!

கூவம் ஆற்றில் படகு சாவரி, 1985 யில் கலைஞர் சிலை உள்ள அண்ணா சாலை, மவுலிவாக்கம் கட்டடம் இடிபாடு, குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் தீக்கிரையான புத்தகத்தை தேடும் சிறுமி, நடிகர் விவேக்கின் கடைசி புகைப்படம் போன்ற புகைப்படங்கள் பொதுமக்களை மிகவும் ஈர்க்கிறது.

ஒவ்வொரு படமும் பல பாடம் சொல்லும், ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களுக்கு சமம், இங்கு உள்ள புகைப்படங்கள் லட்சம் சொற்களை சொல்கிறது. புகைப்படங்கள் கடந்த காலங்களை கண்ணெதிரே கொண்டுவந்து முன்னிறுத்தும், நினைவுகளை பின்னோக்கி இழுத்து செல்லும். வார்த்தையால் விவரிக்க முடியாதவற்றை காட்சியால் விளக்கும் என்பதை புகைப்படக்காண்காட்சி உணர்த்துகிறது.

இதனிடையே கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை, எளிய மக்களின் வாழ்வியலை காலத்தால் அழியாத புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தும் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் லலித்கலா அகாடமியில் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியை பார்வையிட்டேன். ஒரு நூற்றாண்டை வலம்வந்த உணர்வை தந்த கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories