தமிழ்நாடு

'வாங்க நீங்க கொடி ஏத்துங்க'.. தி.மு.க கவுன்சிலரின் செயலால் நெகிழ்ந்து போன தூய்மைப் பணியாளர்!

தூய்மை பணியாளரைத் தேசியக் கொடி ஏற்றவைத்துக் கவுரவித்த தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

'வாங்க நீங்க கொடி ஏத்துங்க'.. தி.மு.க கவுன்சிலரின் செயலால் நெகிழ்ந்து போன தூய்மைப் பணியாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் 74வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார்.

அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'வாங்க நீங்க கொடி ஏத்துங்க'.. தி.மு.க கவுன்சிலரின் செயலால் நெகிழ்ந்து போன தூய்மைப் பணியாளர்!

குடியரசு தினத்தையொட்டி பஞ்சாப் அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர்.

இந்நிலையில், தூய்மை பணியாளரைத் தேசியக் கொடி ஏற்றவைத்துக் கவுரவித்த தி.மு.க கவுன்சிலரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

'வாங்க நீங்க கொடி ஏத்துங்க'.. தி.மு.க கவுன்சிலரின் செயலால் நெகிழ்ந்து போன தூய்மைப் பணியாளர்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கம் 186வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் மணிகண்டன். இவர் நேற்று இந்து காலனி பூங்காவில் நடந்த சமத்துவ பொங்கல் வைத்து 74-வது குடியரசு தின விழா கொண்டாடும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்

அப்போது, மணிகண்டன் துய்மை பணியாளர் ராணி என்பவரை அழைத்து வந்து தேசியக் கொடியை ஏற்றவைத்து அவரை கவுரவித்தார். இதைப்பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும் முதல் முறையாகத் தேசியக் கொடி ஏற்றிய மகிழ்ச்சியில் தூய்மை பணியாளர் ராணி கண்ணீர் விட்டு கவுன்சிலர் மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

'எளியவர்களின் ஏற்றமே உண்மையான நாட்டின் ஏற்றம்' என தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான தூய்மை பணியாளர்களின் கவுரவிப்பு என்பதை தனது செயலால் தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன் நிரூபித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories