தமிழ்நாடு

“டான்ஸர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை - பிறந்தநாளில் எடுத்த விபரீத முடிவு” : காரணம் என்ன?

ரீல்ஸ் மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷ், சென்னை கே.பி.பார்க் குடியிருப்பு பகுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“டான்ஸர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை - பிறந்தநாளில் எடுத்த விபரீத முடிவு” : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கே.பி.பார்க் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் டான்ஸர் ரமேஷ். இவர் சமீபத்தில் சாலையில் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தனது சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தில் சினிமா பாடல்களைப் பார்த்து நடனத்தைக் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிப்படியாக கற்றுக்கொண்டு டான்ஸராக உருவெடுத்த ரமேஷ், சினிமா வாய்ப்புக் கேட்டுப் பல இடங்களில் அழைந்துள்ளார். ஆனால், அவருக்கு வாய்ப்பு் கிடைக்காததால் நடனத்தை விட்டுவிட்டு, சாலையோரத்தில் சிறிய பிளாஸ்டிக் கடையை நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே இவரது நடன வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, நண்பர்களின் உதவியுடன் பழைய சினிமா பாடலுக்கு நடனம் ஆடி அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“டான்ஸர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை - பிறந்தநாளில் எடுத்த விபரீத முடிவு” : காரணம் என்ன?

அந்த வரவேற்பின் தொடர்ச்சியாக, தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் ரமேஷூக்கு கிடைத்தது. அதுமட்டுமல்லாது நடிகர் அஜீத்குமாரின் துணிவு படத்திலும் சிறிய வேடத்தில் ரமேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாளான இன்று, அவரது வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் 10வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories