தமிழ்நாடு

'இந்திதான் இந்தியா எனின்': மொழிப்போர் தியாகிகள் தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்!

சென்னையில் மொழிப்போர் தியாதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

'இந்திதான் இந்தியா எனின்': மொழிப்போர் தியாகிகள் தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகத் தமிழ்நாட்டில் 1960ம் ஆண்டும் இளைஞர்கள் எழுச்சி மிகுந்த போராட்டங்களை நடத்தினர். அப்போது நடராசன், தாளமுத்து, சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், முத்து, இராசேந்திரன், வீரப்பன், சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, முத்து போன்ற பல இளைஞர்கள் தமிழ்மொழிக்காக தனது இன்னுயிரையும் கொடுத்தனர்.

இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில், மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

'இந்திதான் இந்தியா எனின்': மொழிப்போர் தியாகிகள் தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்!

அதேபோன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரணியா சென்று மொழிப் போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், இனி ஓர் உயிரையும் இழக்காமல் நம் உரிமையை நிலைநாட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "இந்திதான் இந்தியா எனின் அந்நிலை மாற்ற இன்னுயிரை ஈந்தேனும் தமிழ்மானம் காப்போம் என உயிர்நீத்த மொழிக்காவலர்களின் திருவுருவப் படங்களுக்குக் கிண்டி மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினேன். இனி ஓர் உயிரையும் இழக்காமல் நம் உரிமையை நிலைநாட்டுவோம்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories