தமிழ்நாடு

#GetOutRavi - “சங்பரிவாரின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் RN.ரவி” : வைகோ ஆவேசம் !

சங்பரிவார் சக்திகளின் போலி ஏஜெண்ட் ஆக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நெல்லையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#GetOutRavi - “சங்பரிவாரின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் RN.ரவி” : வைகோ ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. தமிழ்நாடு பெயரின் வரலாறு தெரியாமல் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். சங்பரிவார் சக்திகளின் போலி ஏஜெண்ட் ஆக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நெல்லையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெல்லையைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியனின் உறவினருமான பூவலிங்கம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#GetOutRavi - “சங்பரிவாரின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் RN.ரவி” : வைகோ ஆவேசம் !

அந்த வகையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லைக்கு வந்து மருத்துவர் பூவலிங்கத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரின் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினார். பின்னர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”மருத்துவர் பூவலிங்கம் மிக எளிமையான முறையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தார். எனவே அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்ற ஆளுநரின் சர்ச்சையான கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மசோதா கொண்டு வந்தார்கள். அதை திமுக ஆதரித்தது அதன் பிறகு அண்ணா முதல்வரான பிறகு அவர் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார்.

Tamilnadu Governor RN Ravi
Tamilnadu Governor RN Ravi

தமிழ்நாடு என்பது இலக்கியங்களில் இருக்கிறது சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் தமிழ்நாடு என்று தான் இருக்கிறது எனவே இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டு நான் தமிழ்நாடு என்று சொல்வேன் நீங்கள் வாழ்க என்று கூற வேண்டும் என அண்ணா சொன்னார்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் அண்ணா தமிழ்நாடு என்று சொல்ல, வாழ்க என்று மூன்று முறை சொன்னார்கள். இப்படி ஒரு பெரிய வரலாறு இருக்கிறது இந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தோடு மட்டுமல்ல அதற்குப் பின்னால் சங்பரிவார் சக்திகள் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது.

அவர்களின் கருவியாக அவர்களின் போலித்தனமான ஏஜெண்ட் ஆக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பெயரையும் மாற்றிக்கொண்டால். ரொம்ப நல்லது தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்றது தியாகத்தால் சூட்டப்பட்ட பெயராகும்” என்று வைகோ தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories