தமிழ்நாடு

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !

சித்த மருத்துவர் ஷர்மிகா தவறான மருத்துவ குறிப்புகளை வழங்குவதாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வந்த நிலையில், அவருக்கு இந்திய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வந்ததில் இருந்தே, இந்துத்துவ சிந்தனைகளை மக்கள் மீது திணிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் முதற்படியாக 'மாடு'. மாட்டை வைத்து அரசியல் செய்வது என்றால் அது பா.ஜ.க. மட்டும்தான். மாட்டை கடவுளாக பாவிக்க வேண்டும், மாட்டு சாணி மருத்துவ குணம் நிறைந்தது, கோமியத்தை குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என பல மூட நம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைக்க முயன்று வருகிறது.

இப்படி இருக்கையில், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமின்றி, மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தேச விரோதியாக கருதி வெறுப்பு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !

இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அந்த கும்பலை, பலரும் மதிப்பதே இல்லை. இதனால் மருத்துவ ஆலோசனை என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளது பா.ஜ.க. அதில் தற்போது சிக்கியுள்ளது பா.ஜ.க மாநில நிர்வாகி டெய்சியின் மகள் ஷர்மிகா.

அதவாது பா.ஜ.கவின் மாநில நிர்வாகியாக இருப்பவர் டெய்சி. இவர் அண்மையில் திருச்சி சூர்யாவின் ஆடியோ சர்ச்சையில் சிக்கினார். அவ்வளவு கேவலமாக சூர்யா பேசியும் கூட "நாங்கள் அக்கா - தம்பி போன்றவர்கள்" என்று பேட்டியளித்தார். இதற்காகவே நெட்டிசன்கள் இவரை கிண்டலடித்து வந்தனர்.

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !

இந்த நிலையில், இவருக்கு ஷர்மிகா என்ற மகள் உள்ளார். சித்த மருத்துவம் படித்த இவர், பிரபல யூடியூப் சேனலுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கி வருவார். உடல் உபாதைகள், இதை சாப்பிடலாம் - இதை சாப்பிடக்கூடாது என்று டிப்ஸ் வழங்கி வருவார்.

இப்படி மருத்துவர் என்ற போர்வைக்குள் இருந்து யூடியூப் சேனல் மூலம் மறைமுக மத பிரச்சாரத்தை செய்வதாக ஷர்மிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனெனில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் மாட்டுக்கறி, கோழிக்கறி உட்பட அனைத்தையும் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மாட்டுக்கறி என்பது நாம் கடவுளாக பார்க்கும் ஒரு அழகான விஷயம். அதையும் மீறி சொல்ல வேண்டுமானால், இந்திய மக்கள் DNA-விலே தங்களை விட பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் ஆகக்கூடிய சக்தி இல்லை. ஆடு, கோழி, கெளதாரி என நம்மை விட சிறிய மிருகங்களை சாப்பிட்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் பிரச்னை ஏற்படும்" என்றார்.

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !

தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "எடை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 3 கிலோ எடை குறைந்தால் கூட, பின்னர் ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும்" என்றார். இதனைத் தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்த கூடாது; பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சிறந்தது. எனவே அதனை சாப்பிடுவதில் கவனம் வேண்டும்" என்றார்.

மேலும் "குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக மாறும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் அழகாகும், ஷாம்பூ தான் முடிக்கு விஷம்.." என்று பல விதமான கருத்துக்களையும் வாரி வழங்கி வருகிறார் ஷர்மிகா.

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !

தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் கன்டென்டாக இருக்கும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு டாக்டரை ட்ரோல் செய்வதற்கு முன் யோசிங்கப்பா கொஞ்சம். யாரை பேசுகிறீர்கள்? ஒரு ராணுவ வீரரை போன்றுதான் மருத்துவரும். நாட்டுக்கு சேவை செய்பவர்கள். நான் ஒரு சித்த மருத்துவர். நீங்கள் டாக்டரையே இல்லை என்கிறார்கள்.

நான் படித்து வந்துள்ளேன் என்ன பேச வேண்டும் என்று தெரியும். மருத்துவர்களை விமர்சிப்பதால், அவர்களை தொந்தரவு செய்தால் தண்டிப்பதற்கான சட்டங்களும் உள்ளன. எங்கள் சித்த மருத்துவர்கள் சேர்ந்ததால் என்ன ஆகும் தெரியுமா?" என்று பேசியுள்ளார்.

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !

முன்னதாக இவர் அள்ளிவிட்ட பொய்கள் குறித்து தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், "ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக, சமூக ஊடகங்களில் கருத்துகள் சொல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் மருத்துவ விதிகளின் படி தவறான கருத்தை பரப்பக் கூடாது.

அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி இல்லை எனவும் எந்த இறைச்சியும் சாப்பிக் கூடாது என்று குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைபடுகிறதோ அது சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி அவர்கள் விருப்பம் படி சாப்பிடலாம். மேலும் ஷர்மிகா சொல்வது போன்ற எந்த ஆதாரமும் இல்லை. தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இதுபோல பேசுகிறார்.

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !

ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டுமே மக்களிடையே சொல்லவேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்றப்பட்டு சொல்லக்கூடாது, மேலும் மருத்துவ ரீதியாக எழுந்த ஹர்மிகா கருத்தில் மீது யாரேனும் புகார் அளித்தார் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர் பேசுவதைக் கேட்டு சுயமாக மருத்துவத்தை மேற்கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் 1541 மருத்துவ மையங்கள் உள்ளன. அங்குச் சென்று இலவசமான ஆலோசனைகளையும் முறையான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ குறிப்பு : அள்ளிவிட்ட பொய்கள்.. Dr ஷர்மிகாவுக்கு பறந்த நோட்டீஸ் - மருத்துவ இயக்குனரகம் அதிரடி !

இந்த நிலையில் தற்போது சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இணையத்தில் பேசி வெளியான சில வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் வந்தது. அதனடிப்படையில் மருத்துவர் ஷர்மிகா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷர்மிகா, இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு வேறு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

Related Stories